Wednesday, January 13, 2010

திருப்பாவை (Thiruppaavai 30)

"வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்."

பொருள்:

பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை, சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை(பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின்(ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்.

vanga(k) kadal kadaindha maadhavanai kEsavanai
thingaL thirumugaththu sEy izhaiyaar senRu iRainchi
anga(p) paRai konda aatrai aNi pudhuvai(p)
painkamala(th) thaN theriyal battar piraan kOdhai-
sanga(th) thamizh maalai muppadhum thappaamE [-sonna
ingu ipparisuraippaar eerirandu maal varai thOL
sengaN thirumugaththu(ch) chelva(th) thirumaalaal
engum thiruvaruL petru inbuRuvar embaavaay.

vaNGkak katal katain^tha - Ship filled oceans (He who) churned
maathavanai kEcavanaith * - Lord Madhavan Lord Keshavan
thiNGkaL thirumukaththuc - (with) moon (like) beautiful faces
cEy izhaiyaar cenRi iRaiNYci * - ornamented maidens reached (and) worshipped
aNGk ap paRai koNta vaaRRai * - there obtained emancipation [drum got] . (that) Story
aNi puthuvaip - beautiful Sri Villiputur's
paiNG kamalath thaN theriyal - fresh lotus garland cool (wearing)
pattarpiraan kOthai conna * - Brahmin priest Andal said.
caNGkath thamizh maalai - Beautiful tamil garland (these)
muppathum thappaamE * - thirty (verses) without fail
iNGk i paricu raippaar - here like this (those who) recite ,
IriraNtu maal varaith thOL * - (between) two pairs (of) mountain(s), stretch shoulders
ceNGkaN thirumukaththuc - red eyes beautiful face
celvath thirumaal aal * - glorious God because of HIM
eNGkum thiruvaruL peRRu - anywhere grace(they) will get (and) will
inpuRuvar empaavaay - enjoy bliss paavai nOmbu
Adopted from :
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp30.html
http://ushiveda.blogspot.com/2007/01/blog-post_14.html
இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
முற்றும்..

3 comments:

Unknown said...

வாழ்க செண்பகலக்குமி,

எங்கள் ஊர் பெருமாள் கோயில்களில் கடைசியாய் இப்பாடலை பாட பல முறை கேட்டிருக்கின்றேன். கடைசிப் பாடலென்பதாலோயென்னவோ அதுவரை அமைதியாய் இருக்கும் பலரும் கூடப் பாடுவர். இதனால் "மாதவனைக் கேசவனை... சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே... ரெம்பாவாய்" இவைத்தவிர வேறொன்றும் புரியாது.
இன்று உங்களால் பாடல் முழுமையும் படிக்கும்/அறியும் பேறுபெற்றேன். நன்றி.

"தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்"

Mona said...

Sabash! Manamarntha paratukkal!! TamilKalvi-ku indru muthal naanum oru visiri! :)

Achyuthan said...

Marvellous blog madam... But is there no way to follow it??