Monday, January 11, 2010

திருப்பாவை (Thiruppaavai 27)

"கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
பகைவரை வெல்லக்கூடிய வலிமையுடைய கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடிப் புகழ்ந்து நாங்கள் பெறும் சன்மானங்கள் நாடே புகழும் அளவுக்கு சிறப்பானது. நாங்களோ சூடகம்(வளை), தோள்வளைகள்(வங்கி),தோடுகள், பூவின் வடிவில் இருக்கும் காது ஆபரணங்கள், காலில் அணியப்படும் ஆபரணங்கள் ஆகியவை அணிந்து புத்தம் புது ஆடைகள் அணிந்து, முழங்கை வரை நெய் வழியும் அளவிற்கு பால் சோறும் உண்டு மக்களுடன் கூடி இருந்து உள்ளம் குளிர மகிழ்வோம்.

koodaarai vellum seer gOvindhaa undhannai(p)
paadi(p) paRai kondu yaam peRum sammaanam
naadu pugazhum parisinaal nanRaaga(ch)
choodagamE thOL vaLaiyE thOdE sevip poovE
paadagamE enRanaiya palagalanum yaam aNivOm
aadai uduppOm adhan pinnE paaR chORu
mooda ney peydhu muzhangai vazhi vaara(k)
koodi irundhu kuLirndhElOr empaavaay

kUtaarai vellum - Enemies (one who) wins (over)
cIrk kOvin^thaa * - great Govinda .
un^thannaip - About you (we will)
paatip paRai koNtu - sing (and) drum get (and)
yaam peRu cammaanam * - we (will) obtain gifts .
naatu pukazhum - whole country praised (by),
paricinaal nanRaakac * - jewels worthy of being ,
cUtakamE thOL vaLaiyE thOtE cevip pUvE * - bracelet , shoulder ornaments , earrings , ear 'maataal',
paatakamE enRanaiya - anklets , other
pal kalanum yaam aNivOm * - many ornaments we will wear
aatai utuppOm - beautiful clothes (we will) wear
athan pinnE - There afterwards,
paaR cORu * - milk , rice
mUta ney peythu - covered (in) ghee dripping,
muzhaNGkai vazhi vaarak * - elbows flowing through,
kUti irun^thu kuLirn^thu - together (we will) enjoy

No comments: