Tuesday, January 05, 2010

திருப்பாவை (Thiruppaavai 22)


"அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்."
பொருள்:
அழகிய இந்த பூமியை ஆண்ட அரசர்கள் எல்லாரும் தங்கள் அபிமானங்களை விட்டு உன் கட்டிலின் அடியில் வந்து கூடிக்  காத்திருப்பது போல் நாங்களும் வந்து காத்திருக்கிறோம். சலங்கையின் மணி போல, பாதி மலர்ந்த தாமரைப் பூப்போன்ற உன் அழகிய சிவந்த கண்கள் சிறிது சிறிதாக திறந்து எங்கள் மீது உன் பார்வை விழக்கூடாதா? சந்திரனும், சூரியனும் ஒரே சமயத்தில் தோன்றுவது போல் உன் அழகிய இரண்டு கண்களாலே எங்களை நோக்கினால் நாங்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடாதோ?
am kaN maa NYaalaththu arasar abimaana
pangamaay vandhu nin paLLi(k) kattiR keezhE
sangam iruppaar pOl vandhu thalaippeydhOm
kingiNi vaay(ch) cheydha thaamarai(p) poo(p) pOlE
sengaN chiRu(ch) chiRidhE emmEl vizhiyaavO
thingaLum aadhiththanum ezhundhaaR pOl
am kaN irandum kondu engaL mEl nOkkudhiyEl
engaL mEl saabam izhindhElOr embaavaay

aNG kaN maa - Beautiful this big
NYaalaththu - world
aracar * - (it's) kings
apimaana - (their) presitige
paNGkamaay - relinquishing
van^thu nin - (who) came to your
paLLik kattiR kIzhE * - sleeping bed under
caNGkam iruppaar pOl - (and) gathered ; like that (we)
van^thu  - have come
thailaipeythOm * - near you (and) approached .
kiNGkiNi - sweet sounding anklet
vaayc ceytha - mouth make
thaamaraip pUp - (open) lotus flower
pOlE * - like
ceNG kaN - beautiful eyes
ciRuc ciRithE - little bit
emmEl vizhiyaavO * - on us (please) look
thiNGkaLum - the moon
aathiththiyanum - the sun
ezhun^thaaR pOl * - waking up; like that
aNG kaN - those eyes
iraNtum koNtu – two bring (and)
eNGkaL mEl - on us [us on]
nOkkuthiyEl * - if you look
eNGkaL mEl - on us [us on]
caapam -(our) death
izhin^thu - (will be) relieved .
El Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu

Adopted and modified slightly from
http://ushiveda.blogspot.com/2007/01/18-26.html
http://madhavipanthal.blogspot.com/2009/01/22.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp22.html

No comments: