Friday, January 08, 2010

திருப்பாவை (Thiruppaavai 24, 25)


"அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று படைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்."


பொருள்:
 
மகாபலி சக்ரவர்த்தியிடம் இரந்து பெற்று அன்று இந்த உலகத்தையே அளந்த திருவடிகளை போற்றுகின்றோம், சீதையை மீட்க இலங்கைக்கு சென்று இராவணனை வென்ற உன் தோள் வலிமையை போற்றுகின்றோம், சகடாசுரனை உதைத்து அழித்த உன் புகழை போற்றுகின்றோம், கன்று வடிவில் வந்த அசுரனை எறிதடியாய் கொண்டு கபித்தாசுரன் என்னும் அசுரனின் மீதெறிந்து இருவரையும் அழித்தவனே உன் திருவடிகளை போற்றுகின்றோம், இந்திரனின் கோபத்திலிருந்து இடையர்களை காப்பாற்ற கோவர்த்தனகிரி மலையை குடையாய் பிடித்தவனே உன் குணத்தைப் போற்றுகின்றோம், பகைவர்களையெல்லாம் வெல்லும் உன் கையில் உள்ள வேலை போற்றுகின்றோம். இவ்விதம் உன் புகழை என்றென்றும் பாடி உன்னிடம் அருள் பெற இன்று வந்துள்ள எங்களுக்கு அருள் புரிவாயாக!  

anRu iv ulagam aLandhaay adi pOtri
senRangu(th) then ilangai setraay thiRal pOtri
ponRa(ch) chakatam udhaiththaay pugazh pOtri
kanRu kuNil aaveRindhaay kazhal pOtri
kunRu kudaiyaay eduththaay guNam pOtri
venRu pagai kedukkum nin kaiyil vEl pOtri
enRenRum un sEvagamE Eththi(p) paRai koLvaan
inRu yaam vandhOm irangElOr embaavaay

anRu ivv  ulakam - Once this world  
aLan^thaay ati pORRi * - measured (Those) feet (we) worship
cenRaNGkuth – going there
thenn ilaNGkai - Southern Lanka
ceRRaay - conquered (That        
thiRal pORRi * - valor (we) worship
ponRac cakatam - destroyed wheel 
uthaiththaay - (by) kicking         
pukazh pORRi *- fame (obtained) (we) worship
kanRu kuNilaa - Calf (as a) sling  
eRin^thaay - threw  (Those)      
kazhal pORRi * - feet (we) worship
kunRu - Hillrock (as an)            
kutaiyaay etuththaay - umbrella  lifted (That)     
kuNam pORRi * - good nature (we) worship
venRu - win (over)    
pakai ketukkum - enemies (and) destroy     
nin kaiyil vEl pORRi *-(That)your in hand spear (we) worship
enRenRu - In all these ways (we do)
un   cEvakamE - your service (and)    
Eththip - praise.                       
paRai koLvaan * -(So that we may be) emancipated
inRu  yaam van^thOm - today we   have come (please)
iraNGku - show us mercy .
El Or empaavaay -Come (Let us do) (the penance of) paavai nonbu

"ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:
தேவகிக்கு மகனாய் அவதரித்து பின் அதே இரவில் யசோதையின் மகனாய் மாறி கம்சனின் கண்ணில் படாமல் வளர்ந்து வந்தவனே! தனக்கு தெரியாமல் வளர்ந்து வருவதை அறிந்ததும் பின் நடக்க போவதை அறியாமல் உனக்கு தீங்கு நினைத்த கம்சனின் நினைப்பை தவறாக்கி அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! உன்னை பிரார்த்தித்து வந்த எங்களின் குறிக்கோளை நிறைவேற்றினால் உன் பிராட்டியான லட்சுமி ஆசைப்படும் செல்வத்தையும், அதை காக்கவல்ல உன் வீரியத்தையும் நாங்கள் பாடி எங்கள் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்!

oruththi makanaayp piRan^thu *  one lady’s (as her) son (You were) born   
Or iravil- (on) one night
oruththi makanaay oLiththu vaLarath * - Some (other) lady (as her) son      hiding  (You)  grew up .
tharikkilaanaakith than - (Kamsa) unable to withstand You          
thINGku   ninain^tha * -(You) harm (he)  thinking of
karuththaip pizhaippiththuk - his very intent (you made) useless
kaNYcan vayiRRil * -(by) (in) Kamsa's belly
neruppenna ninRa netumaalE! * - (like a) fire standing (O) Lord of all
unnai - To you
aruththiththu van^thOm - begging     (we have) come    
paRai tharuthiyaakil * - emancipation  to see if you will give.
thiruththakka  celvamum - To match Lakshmi's  beauty    
cEvakamum yaam paati * - (and) service   we sing
varuththamum thIrn^thu makizhn^thu - (our) sorrows (to be) free of (and be) happy
El Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu

Adopted from 
http://ushiveda.blogspot.com/2007/01/18-26.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp24.html


2 comments:

Sree Balaji said...

அற்புதம்! ஒரு சிறிய வேண்டுகோள் - பதம் பிரித்துப் பொருள் சொல்லுமிடத்தில், தமிழிலும் எழுதினால் படிப்பதற்குச் சுலபமாக இருக்கும். மேலும், இலக்கணக்குறிப்புகள் கிட்டினால் அத்துடன் இணைக்கலாம்.

Maayaa said...

ஸ்ரீ ஸ்ரீ பாலாஜி அவர்களே..
மிக்க நன்றி. எனக்கும் தமிழ் பதப்பொருளும் எழுத ஆசை தான். 2 வருடத்திற்கு முன்பு தொடங்கிய திருப்பாவை இந்த வருடம் எப்படியாவது பொருள் கற்று மனப்பாடம் செய்ய வேண்டும் என்று ஒரு உறுதியோடு உள்ளேன். அவ்வளவு நேரம் ஒதுக்க முடிய வில்லை..இருப்பினும், ஏறக்குறைய அது நிறைவேறும் போல் உள்ளது. இந்த மார்கழி மாதம் முடிந்த பிறகு திரும்பி வந்து தமிழில் பதிவு செய்ய உள்ளேன்.
நன்றி