Tuesday, December 22, 2009

திருப்பாவை (Thiruppaavai)- 15

"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்."



இருவர் பேசும் வழக்கு நடையில் உள்ள பாடல்:

இளங்கிளியின் இனிமையான சொல்லுடையவளே இன்னும் உறங்குகிறாயோ?
'சில் என்று கூச்சலிட்டு ஏன் எழுப்புகிறீர்கள் இதோ வருகிறேன்'  
'சாமர்த்தியமான உன் பேச்சுகளையும் உன் கட்டுக்கதைகளையும் நாங்கள் அறிவோம்'
'நீங்கள் தான் பேசும் திறனில் வல்லவர்கள் நானும் அப்படியே இருந்து விட்டு போகிறேன்'
உடனே நீ கிளம்பு !! உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?  
எல்லாரும் வந்து விட்டார்களா?
இதோ நீயே வந்து எண்ணிக் கொள்
வலிமை மிக்க குவலயப்பீடமென்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களின் புகழை அழிக்க வல்லவனுமாகிய அந்த மாயவனை புகழை நாம் பாட நீயும் வருவாயாக!

ellE! iLam kiLiyE innam uRangudhiyO
chil enRu azhaiyEn min nangaiyeer pOdharuginREn
vallai un katturaigaL paNdE un vaay aRidhum
valleergaL neengaLE naanE thaan aayiduga
ollai nee pOdhaay unakkenna vERudaiyai
ellaarum pOndhaarO pOndhaar pOndhu eNNikkoL
val aanai konRaanai maatraarai maatrazhikka
vallaanai maayanai(p) paadElOr embaavaay

ellE  - What Surpise! 
iLaNG kiLiyE! - young  (beautiful) parrot  
innam      uRaNGkuthiyO! - (you are) still      sleeping
cillenRu  azhaiyEn  - Chilly (harsh) words   Don't call me
min- you in plural (munnilai panmai vinai mutru)
naNGkaimIr  -    Hey girls   
pOth arukinREn - in little while   I am coming
vallai un katturaikaL  - smart (are) your   stories     
paNtE  - since long time               
un  vaay  - (from) your (own) mouth 
aRithum - we know about
vallIrkaL  - Smart ones 
nINGkaLE  - you (all) are   
naanE thaan - Let me
aayituka - be so
ollai     nI   pOthaay  - Quickly   you  start
unakk    enna  - For you  what 
vERu   utaiyai - other  job     (is there)?
ellaarum    pOn^thaarO - All  (who)  are going (have they gone?) 
pOn^thaar  - (Yes) They have gone  
pOn^thu       eNNikkoL -  go out  (and) count for yourselves
vall      aanai - Powerful  elephant
konRaanai - (he who) killed
maaRRaanai - enemy
maaRR     azhikka -    war destroyed
vallaanai -  Powerful   Lord
maayanaip  paatu - Maayan (let us) sing (His praise)
El  Or empaavaay -Come (Let us do) (the penance of) paavai nOmbu

Adopted and modified in some places :

http://www.angelfire.com/hi/prasann/thiruppaavai.html
http://ushiveda.blogspot.com/2006/12/12-17.html

தொடரும்.. 



Sunday, December 13, 2009

திருப்பாவை (Thiruppaavai - 13 & 14)

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளந் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்



பொருள்:

பறவையாய் வந்த பகாசுரன் என்னும் அரக்கனின் வாயை இரண்டாக பிளந்தவனும், பொல்லாத அரக்கனான இராவணின் பத்து தலைகளையும் கிள்ளி  எறிந்தவனுமானவனின் புகழைப் பாடிக் கொண்டு பெண் பிள்ளைகள் எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்துக்கு கூடி இருக்கிறோம். விடியற்காலையான இப்பொழுதில் சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது. பறவைகள் எல்லாம் இரை தேட சிலம்பிக் கொண்டு புறப்பட்டு விட்டன, அழகிய மலரில் மீது வண்டு உறங்குவது போன்ற கண்களை உடையவளே! இந்த நல்ல நாளிலே நன்கு முழுகி நீராடாமல் இன்னும் படுக்கையில் கிடக்கிறாயே, தனியே இருந்து கபடம் நினைக்காமல் எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!

PuLLin vaay keendaanai(p) pollaa arakkanai(k)
kiLLi(k) kaLaindhaanai(k) keerththi mai paadi(p) pOy(p)
piLLaigaL ellaarum paavai(k) kaLambukkaar
veLLi ezhundhu viyaazham uRangitru
puLLum silambina kaaN pOdhari(k) kaNNinaay
kuLLa(k) kuLira(k) kudaindhu neeraadaadhE
paLLi(k) kidaththiyO! paavaay! nee nan naaLaal
kaLLam thavirndhu kalandhElOr Empaavaay
Meaning

puLLin vaay -  The bird’s mouth
kINtaanaip - kizhithaanai - (was) split    (by the Lord).                    
pollaa     arakkanai- The  naughty    rakshasa
kiLLik - Snipped (whose head was)
kaLain^thaanaik   - disposed of (by the Lord).
kIrththi   mai     paatip  -  praising (him and) singing 
pOyp - while going,
piLLaikaL        ellaarum - children (girls) all    
paavaik kaLam - for the Paavai nOmbu  (to that) place                    
pukkaar - reached
veLLi    ezhun^thu - Venus has risen (and)  
viyaazham   uRaNGkiRRu - Jupiter has slept  .
puLLum cilampina kaaN - Birds  (are) chirping. See !! 
pOth - (You who have a) flower (with)
arik - honeybee (on top)
kaNNinaay - (like) The girl with the eyes !
kuLLak kuLirak - Harsh  (and) cold water  (You are) 
kutain^thu - not dipping (into or) 
nIraataathE - bathing (in)

paLLik kitaththiyO? -  (but are) sleeping (and) lying on bed 
paavaay!  nI  nan naaLaal - Oh girl   you (on this)  good day   
kaLLam    - tricks  thavirnthu  - leave them   (and)
kalanthu  - join us    .
El  Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu
14. 

"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்"

பொருள்:

உங்கள்  புழக்கடை (வீட்டின் பின் புறம்) தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர்(தாமரை) மலர்கள் விரிந்தும், ஆம்பல் மலர்கள் குவிந்தும் விட்டன. காவி நிறத்தில் தோய்ந்த ஆடைகளை உடுத்துபவரும், வெண்மையான சாம்பல் (வீபூதி) அணிந்த தவம் செய்யும் துறவிகள் தங்கள் திருக்கோயில்களில் ஆராதனை செய்ய புறப்பட்டு விட்டனர். நீராடுவதற்கு எங்களை 'எழுப்பி விடுவேன்' என்று சொல்லி வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொண்ட நங்கையே! எழுந்திராய்! சொன்னதை செய்யவில்லையே என்ற நாணம் சிறிதும் இல்லாதவளே !! நீ விரைவில் எழுந்து சங்கையும், சக்கரத்தையும் ஏந்தியுள்ள பரந்த கைகளை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை கொண்டவனுமான கண்ணனின் புகழ் பாடுவாயாக!
 ungaL puzhakkadai(th) thOttaththu vaaviyuL
sengazhuneer vaay negizhndhu aambal vaay koombina kaaN
sengaR podi(k) koorai veNbal thavaththavar
thangaL thirukkOyil sangiduvaan pOdhanRaar
engaLai munnam ezhuppuvaan vaaypEsum
nangaay ezhundhiraay naaNaadhaay naavudaiyaay
sangOdu chakkaram Endhum thadakkaiyan
pangaya(k) kaNNaanai(p) paadElOr embaavaay.

uNGkaL  puzhaikkataith - (In) Your backyard         
thOttaththu   vaaviyuL - garden  (in the) pond
ceN GkazhunIr - red lilies (their)
vaay  - mouth/petals
nekizhnthu -  have opened 
aampal  vaay - water lilies (their)  mouth/petals
kUmpina  kaaN have closed  See !
ceNGkal poti  - Red ?   powder (saffron)
kkUrai -  robes   
VeNpal – ashes
Thavaththavar -  wearing ascetics
thaNGkaL thiru  kkOyil  - Their sacred temple  
caNGkituvaan pOthanthaar -  blow conch (are)  going .
eNGkaLai   munnam ­- Us         first  
ezhuppuvaan  -(you) will wake up 
Vaay pEcum - (you)  boasted/mouth speaks .
naNGkaay   ezhun^thiraay  - Hey girl   wake up        
naaNaathaay  - shameless girl   
naavutaiyaay  - talkative girl .
caNGkOtu   cakkaram -  Conch and  wheel    
Enthum - bearing
thata kkaiyan - wide  armed   (Lord)
paNGkayak   -  (with) Lotus 
kaNNaanaip   -  (like) eyes 
paatu sing about (Him).
El Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai Nonbu
Taken from 

http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp14.html
http://ushiveda.blogspot.com/2006/12/12-17.html
and modified slightly whereever necessary

தொடரும்..


Tuesday, December 08, 2009

திருப்பாவை (Thiruppavai) - 12

"கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி 
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர 
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி சினத்தினால்
தென்னிலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:
இளங்கன்றை ஈன்ற எருமையானது தன் கன்றை நினைத்து வருந்துகையில் மடியில் தானாக பால் வடிய அதனால் வீடே சேறாகும் அளவுக்குச் செல்வம் கொண்டவனின் தங்கையே!! எங்கள் தலையில் பனி விழ உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறோம். சினம் கொண்டு அந்த இராவணனை(தென்னிலங்கை கோமானை) கொன்ற மனதுக்கு இனியவனான (இராமனை) பாடி புகழ, நீ வாய் திறவாமல் இருக்கிறாய். இனி..பெண்ணே எழுந்திராய்! இது என்ன பெரும் உறக்கம்? நீ இப்படி உறங்குவதைப் பற்றி அனைத்து இல்லத்தினருக்கும் தெரிந்து விட்டது.
Song 12 :
kanaiththu iLaNG kaRRerumai kanRukku iraNGki 
ninaiththu mulai vazhiyE ninRu paal cOra 
nanaiththu illam cERaakkum naR celvan thaNGkaay 
panith thalai vIzha nin vaacaR katai paRRic 
cinaththinaal thennilaNGkaik kOmaanaic ceRRa 
manaththukku iniyaanaip paatavum nI vaay thiRavaay 
iniththaan ezhun^thiraay Ithenna pEruRakkam 
anaiththu illaththaarum aRin^thu ElOr empaavaay.
 
Kanaithu -calling out
iLam - young 
kaRRu erumai - crying buffaloes 
kanRukku irangi - for the calves showing motherly affection
ninaiththu mulaivazhiyE- thinking (of those calves) (their) through their breast them 
NinRu - standing
paal cOra - milk flows
nanaithth illam cER aakkum - Wet the house and make it swampy 
naR celvan thangaai - good prosperous cowherd's sister!
pani ththalai vIzha - mist (on our) heads   (is) falling 
nin vaacaR kadai paRRic - your outside entrance (are) holding on to.
cinath thinaal - because of anger 
thenn ilangaik kOmaanaic - Southern Lanka's   ruler       
ceRRa - destroyed (by the Lord)
manath thukku iniyaanaip - the lord whose thoughts bring sweetness 
paadavum - to sing
nI vaay thiRavaay - You open your mouth
ini ththaan - now atleast
ezhundhiraay - wake up 
eedh enna - what is this 
pEr uRakkam - big sleep?
anaithth illathaarum - all other house people
maRindhu - know
El -Come (Let us do)  
Or empaavaay -(the penance of) paavai nonbu
 
Read and Modified from  
http://ushiveda.blogspot.com/2006/12/12-17.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp12.html 
 
தொடரும்..

Thursday, December 03, 2009

திருப்பாவை (Thirupaavai) - 11

"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்."
பொருள்:
கன்றுகள் ஈன்ற கறவைப்பசுக் கூட்டங்களிடம்(கணங்கள்) குறைவில்லா பால் கறந்து,
பகைவரின்(செற்றார்)திறன் அழிய அவர்களோடு போர் செய்யும், குற்றங்கள்
ஏதுமில்லாத இடைக்குலத்தை சேர்ந்த பொன் கொடி போன்ற அழகானவளே! காடுகளில்
திரியும் அழகிய மயிலை போன்றவளே! உன் தோழிகள் அனைவரும் உன் வீட்டு
முற்றத்தில் வந்து கூடி அழகிய மேகத்தைப்(முகில்) போன்ற நிறம் கொண்ட
கண்ணின் புகழ் பாடும் பொழுதில் செல்வம் நிறைந்த பெண்ணே நீ சிறிதும்
அசையாமலும், பேசாமலும் ஏன் உறங்குகிறாய்?

kaRRuk kaRavaik kaNangaL pala kaRandhu 
ceRRaar thiRalazhiyac cenRu ceruc ceyyum 
kuRRam onRillaadha kOvalartham poRkodiyE 
puRRaravalkul punamayilE pOdharaay 
cuRRaththu thOzhimaar ellaarum vandhu  nin
muRRam pugundhu mugilvaNNan pEr paada 
siRRaadhE pEsaadhE celvap peNdaatti  nee
eRRukkuRangum poruL ElOr embaavaay.
 
kaRRu kaRavai            cows that are with calves 
pala kaNangaL            many herds
kaRandhu                 milked
ceRRaar                  enemies'
thiRal                   strength
azhiya                   that wipes out, destroys
cenRu                    by going
ceru ceyyum              doing battle
kuRRam                   fault
onRu illaadha            without a single
kOvalar tham             of the cowherds        
pon kodiyE               O you (who are like a) golden creeper!
puRRu                    nest, a mound that is a resting place for a snake
aravu                    snake (that is just coming out of the mound)
alkul                    waist
puna mayilE              O you (who is like a) forest peacock!
pOdharaay                Come out!
cuRRaththu               relatives (near and dear)
thOzhimaar               girlfriends
ellaarum                 all
vandhu                   are here
nin                      your
muRRam                   inner courtyard, living space of a house
pugundhu                 have entered
mugil vaNNan             the One who is colored like a dark raincloud
pEr paada                singing (his divine) names
siRRaadhE                without stirring
pEsaadhE                 without speaking
celvap peNdaatti         fortunate girl
nee                      you
eRRukku                  for what reason
uRangum poruL            your goal of sleeping
 
http://www.ramanuja.org/sv/alvars/andal/tiruppavai/verse11.html
http://ushiveda.blogspot.com/2006/12/6-11.html 
http://madhavipanthal.blogspot.com/2008/12/11.html 
தொடரும்..

Monday, August 10, 2009

வடவரையை மத்தாக்கி - 6






மேலுள்ள படங்களைப் பாருங்கள். இது தாய்லந்து நாட்டு பேங்காக் நகரத்தின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் உள்ள ஒரு கலை உருவம் (structure). இப்பாடலுக்குப் பொருந்தும் வண்ணம் அற்புதமாக உள்ளது.

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

நாராயணா வென்னா நாவென்ன நாவே;

பதவுரை:
மடந்தாழும் -மடம் தாழும் - மடமை(அறியாமை) தங்கும்
நெஞ்சத்துக் -நெஞ்சம் கொண்ட
கஞ்சனார் -கம்சனின்
வஞ்சம் -சூழ்ச்சிகளை
கடந்தானை -முறியடித்தவனை
நூற்றுவர்பால் -நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில்
நாற்றிசையும் -நாங்கு திசைகளிலும் (உள்ளவர்கள்)
போற்றப் -புகழ
படர்ந்து ஆரணம் -சென்று வேதங்கள்
முழங்கப் -ஒலிக்க
பஞ்சவர்க்குத் தூது -பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக
நடந்தானை - நடந்து சென்றவனை
ஏத்தாத -புகழ்ந்து பாடாத (துதிக்காத)
நாவென்ன நாவே - நாக்கும் ஒரு நாக்காகுமா!!
நாராயணா வென்னா -நாராயணா என்று சொல்லாத
நாவென்ன நாவே -நாக்கும் ஒரு நாக்காகுமா!!

பொருளுரை: அறியாமை தங்கும் நெஞ்சம் கொண்ட கம்சனின் சூழ்ச்சிகளை முறியடித்தவனை, நூற்றுக்கணக்கானவர்களுடன் சென்று, நாங்கு திசைகளிலும் உள்ளவர்கள் புகழ, வேதங்கள் ஒலிக்க, பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக நடந்து சென்றவனை புகழ்ந்து பாடாத நாக்கும் ஒரு நாக்காகுமா!! நாராயணா என்று சொல்லாத நாக்கும் ஒரு நாக்காகுமா!!
முற்றும்

Monday, August 03, 2009

வடவரையை மத்தாக்கி - 5


பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும்
கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

பதவுரை:
பெரியவனை - அனைவரைக் காட்டிலும் பெரியவனை
மாயவனைப் - மாயங்கள் செய்பவனை
பேருலக மெல்லாம் - பெரிய உலகங்களெல்லாம்
விரிகமல - விரிக்கின்ற தாமரை மலர் ( மேலுள்ள பிரம்மாவினை)
உந்தியுடை - வயிற்றில் கொண்டவனை
விண்ணவனைக் - வானவனை
கண்ணும் - கண்களும்
திருவடியும் - திருவடிகளும்
கையும் - கைகளும்
திருவாயும் - திருவாயும்
செய்ய - சிவக்க
கரியவனைக் - கரிய நிறத்தவனை
காணாத - காணாமல் உள்ள
கண்ணென்ண கண்ணே - கண்களுமென்ன கண்களா!!
கண்ணிமைத்துக் - கண்களினை இமைத்து
காண்பார் தம் - காண்கின்றவர்களின்
கண்ணென்ண கண்ணே - கண்களென்ன கண்களா!!

பொருளுரை:
அனைவரைக் காட்டிலும் பெரியவனை, மாயங்கள் செய்பவனை, பெரிய உலகங்களெல்லாம் உருவாக்கும் தாமரை மலர் மேலுள்ள பிரம்மாவினை வயிற்றினில் கொண்டவனை..வானவனை.. கண்களும், திருவடிகளும், கைகளும், திருவாயும் சிவக்க, கரிய நிறத்தவனைக் காணாமல் இருக்கும் கண்களுமென்ன கண்களா!!(கண் கொட்டாமல் காணவேண்டிய அழகினை) கண்களினை இமைத்து காண்பவர்களின் கண்களென்ன கண்களா!!

தொடரும்..

Friday, July 10, 2009

வடவரையை மத்தாக்கி - 4

படர்க்கைப் பரவல் (படர்க்கை(third person)யில் வைத்துப் பரவுதல்)

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;


பதவுரை:
மூவுலகும் - மூன்று உலகும்
ஈரடியான் - இரண்டு அடிகளால்
முறை - முறைப்பட்டு
நிரம்பா - நிரம்பாத (தை)
வகைமுடியத் - முற்றும்(முடிக்கும்)வண்ணம்
தாவிய - தாவிய
சேவடி - சிவந்த திருவடி
சேப்பத்- சிவக்கும் வண்ணம்
தம்பியொடுங்- தம்பியோடு (இலக்குவனோடு)
கான்போந்து -கானகம் புகுந்து
சோவரணும் - சோ என்ற அரணும் (அதில் வாழும் மக்களும்)
போர்மடியத் - போரில் இறக்க
தொல்லிலங்கை - தொன்மையான இலங்கையின்
கட்டு அழித்த - கட்டுக்காவலையும் அழித்த
சேவகன் - வீரன்
சீர் கேளாத - புகழ் கேளாத
செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!
திருமால் சீர் கேளாத - அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத
செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!

பொருளுரை:
மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம்
தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?!!
தொடரும்..

Wednesday, July 08, 2009

வடவரையை மத்தாக்கி - 3

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;


பதவுரை:
திரண்டு அமரர் - தேவர்கள் கூடி
தொழுது ஏத்தும் - வணங்கி போற்றும்
திருமால் - திருமால்
நின் செங்கமல - தங்களின் செம்மையான தாமரை மலர்
இரண்டடியான் - இரண்டு அடிகளால்
மூவுலகும் - மூன்று உலகும்
இருள்தீர நடந்தனையே - இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே
நடந்தஅடி - (அப்படி) நடந்த அடி
பஞ்சவர்க்குத் - பஞ்ச பாண்டவர்களுக்கு
தூதாக - (குருவம்ச/அஸ்தினாபுர சபைக்கு)தூதாக
நடந்தஅடி - நடந்து சென்ற அடிகளாம்
மடங்கலாய் - (நர)சிம்மமாய் வந்து
மாறு - பகை
அட்டாய் - அழித்தாய்
மாயமோ - இதென்ன மாயமோ
மருட்கைத்தே - வியப்பு உடையதாய் உள்ளதே!

பொருளுரை:
தேவர்கள் கூடி வணங்கி போற்றும் திருமாலே தங்களின் செம்மையான தாமரை மலர்
இரண்டு அடிகளால் மூன்று உலகும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே. அப்படி நடந்த அடி
பஞ்ச பாண்டவர்களுக்காக அஸ்தினாபுர சபைக்கு தூதாக நடந்து சென்ற அடிகளாம்.(நர)சிம்மமாய் வந்து பகை அழித்தாய். இதென்ன மாயமோ!! வியப்பு உடையதாய் உள்ளதே!
தொடரும்..

Monday, July 06, 2009

வடவரையை -2

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த

உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே

உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்

வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

பதப்பொருள்:

அறு பொருள்- தீர்ந்த பொருள். அறுதியிடப்பட்ட பொருள். ஐய்யமற்ற பொருள்.

ஐவகை சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருள் என்றும் கொள்ளலாமாம்.

இவனென்றே- இவன் என்றே

அமரர் கணந்- தேவர் கூட்டம்

தொழுது ஏத்த- வணங்கி புகழ்ந்து பாட/சொல்ல

உறுபசி- நிறைந்த பசி

ஒன்று இன்றியே- ஒன்று இல்லாமலேயே

உலகு அடைய- உலகம் முழுவதையும்

உண்டனையே- உண்டாயே

உண்டவாய்- (அப்படி) உண்ட வாய்

களவினான்- களவி(திருட்டி)னால்

உறிவெண்ணெ- உறியினில் உள்ள வெண்ணை(தனை)

உண்டவாய்- உண்ட வாய்!!!

வண் துழாய்- வண்மையான துளசி

மாலையாய் - மாலையை உடையவனே

மாயமோ - இதன்ன மாயமோ

மருட்கை த்தே - வியப்பு உடையதாயுள்ளதே!

பொருளுரை

தீர்ந்த பொருள் இவன் என்றே தேவர் கூட்டம் வணங்கி புகழ
நிறைந்த பசி ஒன்று இல்லாமலேயே உலகம் முழுவதையும் உண்டாயே!! அப்படி உண்டவாய் களவினால் உறியினில் உள்ள வெண்ணைதனை உண்டவாய்!!!வண்மையான துளசி மாலையை அணிந்தவனே!! இதன்ன மாயமோ !! வியப்பு உடையதாயுள்ளதே!
தொடரும்..