Thursday, December 03, 2009

திருப்பாவை (Thirupaavai) - 11

"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்."
பொருள்:
கன்றுகள் ஈன்ற கறவைப்பசுக் கூட்டங்களிடம்(கணங்கள்) குறைவில்லா பால் கறந்து,
பகைவரின்(செற்றார்)திறன் அழிய அவர்களோடு போர் செய்யும், குற்றங்கள்
ஏதுமில்லாத இடைக்குலத்தை சேர்ந்த பொன் கொடி போன்ற அழகானவளே! காடுகளில்
திரியும் அழகிய மயிலை போன்றவளே! உன் தோழிகள் அனைவரும் உன் வீட்டு
முற்றத்தில் வந்து கூடி அழகிய மேகத்தைப்(முகில்) போன்ற நிறம் கொண்ட
கண்ணின் புகழ் பாடும் பொழுதில் செல்வம் நிறைந்த பெண்ணே நீ சிறிதும்
அசையாமலும், பேசாமலும் ஏன் உறங்குகிறாய்?

kaRRuk kaRavaik kaNangaL pala kaRandhu 
ceRRaar thiRalazhiyac cenRu ceruc ceyyum 
kuRRam onRillaadha kOvalartham poRkodiyE 
puRRaravalkul punamayilE pOdharaay 
cuRRaththu thOzhimaar ellaarum vandhu  nin
muRRam pugundhu mugilvaNNan pEr paada 
siRRaadhE pEsaadhE celvap peNdaatti nee
eRRukkuRangum poruL ElOr embaavaay.
 
kaRRu kaRavai      cows that are with calves 
pala kaNangaL      many herds
kaRandhu         milked
ceRRaar         enemies'
thiRal          strength
azhiya          that wipes out, destroys
cenRu          by going
ceru ceyyum       doing battle
kuRRam          fault
onRu illaadha      without a single
kOvalar tham       of the cowherds    
pon kodiyE        O you (who are like a) golden creeper!
puRRu          nest, a mound that is a resting place for a snake
aravu          snake (that is just coming out of the mound)
alkul          waist
puna mayilE       O you (who is like a) forest peacock!
pOdharaay        Come out!
cuRRaththu        relatives (near and dear)
thOzhimaar        girlfriends
ellaarum         all
vandhu          are here
nin           your
muRRam          inner courtyard, living space of a house
pugundhu         have entered
mugil vaNNan       the One who is colored like a dark raincloud
pEr paada        singing (his divine) names
siRRaadhE        without stirring
pEsaadhE         without speaking
celvap peNdaatti     fortunate girl
nee           you
eRRukku         for what reason
uRangum poruL      your goal of sleeping
 
http://www.ramanuja.org/sv/alvars/andal/tiruppavai/verse11.html
http://ushiveda.blogspot.com/2006/12/6-11.html 
http://madhavipanthal.blogspot.com/2008/12/11.html 
தொடரும்..

5 comments:

krishnaraj said...

வாழ்க செண்பகலக்குமி,

நீண்ட நாள் முன்பு ஒரு கட்டுரைப் படித்தேன், அதில் 'மொழி பெயர்ப்பாளன் ஒரு திருடன்' என ஒரு மேற்கோள் (பொன்மொழி) காட்டப்பட்டிருந்தது. அன்றெனக்கு அதன் பொருள் விளங்கவில்லை. பின்னாளில் நானே மொழிபெயர்க்கும் பொழுது அதன் பொருளுணர்ந்தேன். நிற்க.

" புற்றர வல்குல் புனமயிலே " =
புற்று + அரவு + அல்குல் + புனம்+ மயில்

அல்குல் = இடுப்பு என(இங்கு) பொருள் கூறியுள்ளிர்; பாம்புக்கு ஏது இடுப்பு ?
தவறான பொருள் சொல்வதை விட அதை சொல்லாமலே விட்டிருக்கலாம்.

'பால்' குறித்து நிறைய அறியாமையும், குழப்பங்களும், மூடத்தனகளும் நம்மிடம் உள்ளன. நான் நாள்தோறும் சொல்லும் 'அபிராமி அந்தாதி'யிலிருந்து, கம்பராமாயணம், சித்தர்கள் இலக்கியமென எல்லாவற்றிலும் 'பால்' குறித்த 'உவமைகளும்', 'உருவகங்களும்' நிறம்ப உள்ளன. 'பால்' குறித்த புரிதல் இல்லாவிடில் இதில் எந்த இலக்கியத்தையும் முழுதாக உள்வாங்கிக்கொள்ள முடியாது.

நம் 'தொல்' கோயில்களில் உள்ள சிற்பங்களை நோக்குங்கள் அவை நம் மூதாதையரின் நாகரிகத்தைக் காட்டும்.
கிருட்டிண தேவராயன் கட்டிய 'திருமலை திருப்பதிக்கு'ச் சென்றால், மலை ஏறுவதற்கு முன் கீழேயுள்ள முதற்படியின் வாயிலை பாருங்கள் நம் மக்களின் நாகரிகம் அறிவீர்.

நம்முடைய இன்றைய நாகரிகம் நம் மூதாதையருடையன அல்ல. 'முகமதியர்' அவர் பின் வந்த 'ஐரோப்பியர்' முதலியோரின் தாக்கமே நம்முடை இன்றைய 'ஒப்பனையும்', 'நாகரிகமும்'. நாம் அணியும் சட்டை வெள்ளையர் அளித்தது, அதனால் தான் நாம் அவரை 'சட்டைக்காரன்' என்கிறோம்.

ஒர் இலக்கியத்தை புரிந்துக்கொள்ள முதலில் நாம் அம்மக்களின் 'கால பண்பாட்டு'ச் சூழலை முழுதாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

நாம் நிகழ் காலத்தில் ஒரு காலை வைத்துக்கொண்டு கடந்த காலத்தில் ஒரு காலை வைத்தால் தடுமாற்றமே மிஞ்சும்.

'பால்' குறித்து பேசினால் பண்பாடு கலாச்சாரமென ஏதாவது உளருவர். பண்பாடும், கலாச்சாரமும் ஒரே பொருள் கொண்ட இரண்டு சொற்கள். பண்பாடு நல்ல தமிழ்ச் சொல்; கலாச்சாரம் வடச்சொல். வேண்டுமானால் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள், இரண்டு சொற்களுக்குமான வேறுபாட்டை, தங்கள் கற்பனைக்கெட்டியவரை ஏதாவது கூறுவர் :)

அந்தாதி: முதல் பாட்டின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்து அடுத்த பாட்டின் தொடக்கமாக அமையப்பெற்றிருக்கும்.

'குணா' திரைப் படத்தின் உச்சக்காட்சியில் தலைவன் மரித்த தலைவியை ஏந்தியவாறு பாடும் அபிராமி அந்தாதி, இவை:


புண்ணியம் செய்தன மேமன
மேபுதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும்
கூடிநம் காரணத்தால்
நண்ணிஇங் கேவந்து தம்மடி
யார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல்பத்ம
பாதம் பதித்திடவே.


இடங்கொண்டு விம்மி இணைகொண்(டு)
இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்(டு)
இறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட
நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே.

நல்லவேளையாக நம் தணிக்கை குழுவினருக்கு 'நல்ல தமிழ்'த் தெரியாது; தெரிந்திருந்தால் இந்த பாடலையே வெட்டியெடுத்திருப்பர்.

தனந்தரும் கல்வி தரும்ஒரு
நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்
தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம்
தரும்அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ லாள்
அபிராமி கடைக்கண்களே.

இந்த மூன்றாம் அந்தாதி 'வலம்புரி சான்' சொல்லகேட்டு எனக்கு பிடித்துபோனவொன்று. மூன்றையும் நாளூம் சொல்வேன்.
( http://www.suratha.com/ இந்தத்தொடுப்பு எந்தவொரு எழுத்துருவையும் நாம் விரும்பும் எழுத்துருவுக்கு மாற்ற உதவும்)

திருக்குறளுக்கு தட்சிணாமூர்த்தி (கலைஞர்), அரங்கராசன்(சுசாதா) என இருவர் உரையும் வைத்துள்ளேன், இருந்தும் முதலில் நேரே 'பாவை' படித்து பொருள் கொள்ள முயல்வேன். சில நேரங்களில் என்னுடைய புரிதல்(!) இருவருடையதிலிருந்து வேறுபடும். சில பாக்களுக்கு இருவரும் வெவ்வேறு உரையெழுதியுள்ளனர்; அதனால் நானே படிக்கத்(!) துவங்கிவிட்டேன்.

நீண்டநாளா நிறைய எழுதினேன் அவ்வளவையும் போடமுடியாது; இடமிராது; அஞ்சலாக அனுப்ப உங்கள் 'மின் முகவரி'யும் தெரியாது. அதனால் 'நீக்கியது' போக இவ்வளவுதான் இப்போதைக்கு.....

சரி உங்கள் பதிவிற்கும் இந்த பின்னூட்டத்திற்கும் என்ன தொடர்பு என பார்க்கிறீர்களா? அதுதான் எனக்கும் விளங்கவில்லை; ஆரம்பம் சரியாயிருந்தமாதிரியிருக்கு முடிவுதான்..... :)

அன்பன்,
கிருட்டிண ராசு, ப.

Maayaa said...

krishnaraj,

muthalil onnu sollanum..naan type seyyum idathil tamil font download panna mudiyaadhu..indru.. sorry for typing english in tamil.
Aprom,
1. naanaaga porul thiruppavaikku ezhutha villai.. idhai muthal padhivuleye sonnen.
2. naan onrukku moondru edangalil porul padithu.. manadhukku engu sariyaana porul endru alasiya piragu dhan ingu padhivaai idugiren..neraiya idathil sandhegangal iruku.
3. “alkul” enbadhu oru sarchaikuriya vaarthaiyaai irundhriku..kambaruke idhai ubayogam seythu aayirathetu prachnai..idhargu "idai"nnu oru porul undunnu 2-3 edathil paditha piragu dhaan ingu solli ullen. Infact, I remember this word so well because I spend so much on various sites.
Aravu alkul – paambai pondra valaindha iduppu
If you get better explanation, please explain!!

Maayaa said...

http://madhavipanthal.blogspot.com/2008/12/11.html

krishnaraj said...

வாழ்க செண்பகலக்குமி,
இந்த பாமரனுக்கு மறுமொழிந்தமைக்கு முதலில் மிக்க நன்றி..
" typing english in tamil " அல்ல typing tamil in english என்பதே சரி. சரி சரி ... :) செய்திக்கு வருவோம்.
" 1. naanaaga porul thiruppavaikku ezhutha villai.. idhai muthal padhivuleye sonnen." நானறிவேன். நீங்கள் கொடுத்திருந்த தொடுப்புகளையும் பார்த்தேன்.
2. naan onrukku moondru edangalil porul padithu.. manadhukku engu sariyaana porul endru alasiya piragu dhan ingu padhivaai idugiren..neraiya idathil sandhegangal iruku. நன்று. ஐயம்(சந்தேகம்) தானே அறிவின் ஆரம்பம்.
3. “alkul” enbadhu oru sarchaikuriya vaarthaiyaai irundhriku..kambaruke idhai ubayogam seythu aayirathetu prachnai..idhargu "idai"nnu oru porul undunnu 2-3 edathil paditha piragu dhaan ingu solli ullen. Infact, I remember this word so well because I spend so much on various sites.
Aravu alkul - paambai pondra valaindha iduppu
If you get better explanation, please explain!!
“alkul” enbadhu oru sarchaikuriya vaarthaiyaai irundhriku.. இந்த சொல்(வார்த்தை) இப்பொழுதுதான் 'அப்படியாக்கப்பட்டிருக்கு' என்பதே மெய். அதுவும் எம்மக்களின் மொழி, பண்பாடு, இலக்கணமரபறியா மேதைகளால்.
kambaruke idhai ubayogam seythu aayirathetu prachnai.. இந்த செய்தி உங்களுக்கு எங்கிருந்துகிட்டியது என தெரியவில்லை. இது முற்றும் தவறான செய்தி. கம்பனை படிக்க முடியாவிடினும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கம்பராமாயணத்தை பற்றி எழுதியுள்ளதை படித்தால் நன்கு விளங்கும். ஒரு செய்தித் தெரியுமா இலக்குவன் தன் தங்கையின் மூக்கை அறுத்ததால் மட்டுமே இராவணன் சீதையை தூக்கிச் செல்லவில்லை அவன் தங்கையின் முலை காம்பையும் இலக்குவன் அறுத்தான் என்பதால்தான். ஐயமிருந்தால் கம்பராமாயணத்தை சரியாய் படித்தவரிடம் கேளுங்கள் அல்லது நீங்களே படித்துவிடுங்கள்.
idhargu "idai"nnu oru porul undunnu 2-3 edathil paditha piragu dhaan ingu solli ullen. 'இடை'யென்றும் ஒரு பொருளுண்டு, நான் மறுக்கவில்லை. ஆனால் நம் 'இலக்கண மரபு' ஆனது, 'இடம் "நோக்கி" பொருள் கொள்ளுதல்' ஆகும். அதற்கு 'இங்கு' பொருளென்ன என்பதே வினா. (கேள்வி = காதால் கேட்டல், வினா = ? ; கேள்வி பதில் என்பது தவறு, வினா விடை என்பதே சரி) 'இடை'க்கு 'கொடி'யைதான் உவமையாகவும், உருவகமாகவும்(கொடியிடையாள்) சொல்வது நம் 'இலக்கிய மரபு'. பாம்பையல்ல.
"If you get better explanation, please explain!! " தங்களின் இந்த வினா ஒன்றை தெளிவாக்குகிறது, அது என் பின்னூட்டத்தை தாங்கள் சரியாக படிக்க(உள்வாங்க)வில்லை அல்லது உங்களுக்கு விளங்கும் வண்ணம் எனக்குச் சொல்ல தெரியவில்லை. இரண்டாவது தான் சரியாயிருக்கும். பின்வரும் இந்த 'அபிராமி அந்தாதி'யை சென்ற பின்னூட்டத்திலேயே எழுதியிருந்தேன்.
இடங்கொண்டு விம்மி இணைகொண்(டு)
இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்(டு)
இறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட
நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே.
" முத்து வடங்கொண்ட கொங்கை மலை " = முத்து + வடம்(கயிறு) + கொண்ட + கொங்கை(முலை) + மலை
" நல்லரவின் படங்கொண்ட அல்குல் " = நல்ல + அரவு(பாம்பு) + படம் + கொண்ட + அல்குல்
இதை 'அபிராமி அந்தாதி'யிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளேன். இதுவே போதுமான விளக்கம் தங்களுக்கு தந்திருக்கும் என நம்புகிறேன். அபிராமி = கொற்றவை = உமையாள் = பார்வதி
'அபிராமி பட்டரை'விட 'சிறந்த அருளாளன்' உண்டோ? அவர்தான் தம் 'தேவி'யை இவ்வாறு 'விரித்துரை'த்துள்ளார்.

krishnaraj said...

பாரதிராசா ஒரு முறை வெறுத்துபோய் கூறினார்,'எம்மக்களையும் அவரின்"பாட்டை"யும் சொன்னால் "உரையாடலி"லும் "காட்சி"யிலும் ஆபாசமென கூறி வெட்டிவிடுகின்றனர்'.
என் கல்லூரி நாள்களில் நான் படித்தது. 'சூனியர் போசுட்டு' வாரயேட்டில் பேராசான் 'கவிக்கோ அப்துல் ரகுமான்' 'ஆறாவது விரல்' எனும் தலைப்பில் வாரந்தோறும் ஒரு பொருள் குறித்தெழுதுவார். பூவை பற்றி எழுதிய கட்டுரையில் 'பூ' 'யோனி'யின் குறியீடு என எழுதியிருந்தார்.
நான் முன்பு சொன்ன கருத்தையே மீண்டும் நினைவூட்டவிரும்புகிறேன்.
" ஒர் இலக்கியத்தை புரிந்துக்கொள்ள முதலில் நாம் அம்மக்களின் 'கால பண்பாட்டு'ச் சூழலை முழுதாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
நாம் நிகழ் காலத்தில் ஒரு காலை வைத்துக்கொண்டு கடந்த காலத்தில் ஒரு காலை வைத்தால் தடுமாற்றமே மிஞ்சும்.
நம்முடைய இன்றைய நாகரிகம் நம் மூதாதையருடையன அல்ல. 'முகமதியர்' அவர் பின் வந்த 'ஐரோப்பியர்' முதலியோரின் தாக்கமே நம்முடை இன்றைய 'ஒப்பனையும்', 'நாகரிகமும்'. நாம் அணியும் சட்டை வெள்ளையர் அளித்தது, அதனால் தான் நாம் அவரை 'சட்டைக்காரன்' என்கிறோம் "

'ஓசோ'வின் சிறுகதையொன்று இங்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்..... வகுப்பில் ஆசிரியர் மாணவியிடம் வினவினார், 'நாம் உணர்ச்சி வயப்படும் பொழுது நம் உடலில் எது அதிகம் விரிவடைகிறது' என்று. அதற்கு அப்பெண் வெட்கப்பட்டு நின்றாள். மாணவனிடம் வினவினார். அதற்கு 'கண்ணின் கருவிழி' எனும் சரியான விடையைச்சொல்லி மாணவன் அமர்ந்தான். ஆசிரியர் அம்மாணவிக்கு கூறினார்.
1. நீ பாடங்களை சரியாக படிப்பதில்லை
2. நீ செய்திகளை தவறாக புரிந்து கொண்டுள்ளாய்
3. நீ இப்படியேயிருந்தால் வாழ்வில் குழப்பமே மிஞ்சும்.
(ஓசோ எனக்கு குருவோ நானவனுக்கு சீடனோ அல்லது அவன் தலைவனோ நான் தொண்டனோ அல்லன். ஓசோ எனப்படும் 'மோகன் ரசனீசு சந்திரா' ஒரு 'வாழ்வியல் கலைஞன்' நான் அவனின் 'மிகப்பெரிய இரசிகன்'. அவரின் நூற்களை படித்தால் உங்களுக்கும் கூட அவரை பிடித்துபோகும்.)
தங்கள் 'மின் முகவரி' தெரியாதலால் எழுதியதை பலமுறை திருத்தி இரண்டாக வெட்டி ஒட்டி போட்டுள்ளேன் - இடமின்மையால். தெளிவின்மையிருப்பின் (எழுத்தில்) பொருத்தருளவும்(மன்னிக்கவும்).

மாற்று கருத்துக்கும் 'செவிமடு'க்கும் உங்களின் 'உள்ளம்' பாராட்டுக்குரியது.
உங்களின் மொழி பற்றும் தொண்டும் போற்றுதலுக்குரியது
வாழ்க அம்மையீர்!!!,

அன்பன்,
கிருட்டிண ராசு, ப.
புதுச்சேரி