"மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத் திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்."
பொருள்:
மழைக்காலத்தில் மலைக்குகையில் (தன் துணையோடு/)அமைதியாக உறங்கி கிடந்த சிங்கமானது விழித்துக் கொண்டு  கண்களில் தீப்பொறி பறக்க, பிடரி மயிர் சிலிர்த்துக் கொள்ள, உடலை உதறி நிமிர்ந்து கர்ஜனையிட்டுக் கொண்டே குகையிலிருந்து வெளி வருவது போல, காயாம் பூ போன்ற நிறமுடைய நீயும் உன் கோயிலிலிருந்து வெளியே வந்து இங்கு எழுந்தருளி அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் இங்கு வந்துள்ள காரணத்தைஆராய்ந்து  எங்களுக்கு அருள் செய்வாயாக! 
maari malai muzhainchil manni(k) kidandhu uRangum
seeriya singam aRivutru(th) thee vizhiththu
vEri mayir ponga eppaadum pErndhu udhaRi
moori nimirndhu muzhangi(p) puRappattu(p)
pOdharumaa pOlE nee poovaippoo vaNNaa un
kOyil ninRu iNGNGanE pOndharuLi(k) kOppudaiya
seeriya singaasanaththu irundhu yaam vandha
kaariyam aaraayndhu aruLElOr embaavaay 
Maari - Rainy season; 
malai - mountain 
muzhaiNYcil - in a cave (with 
mannik kitan^thu – silently/wife (??- not sure) lying 
uRaNGkum * - united sleeping 
cIriya ciNGkam - brave lion 
aRivuRRuth - comes to senses
thI vizhiththu *-(opens his) fiery eyes
vEri mayir poNGka – (root hair)mane shaking (his body) 
eppaatum pErn^thu uthaRi * -on all sides bending/moving shaking
mUri nimirn^thu – (murithu)into shape, standing up 
muzhaNGkip puRappattup * - roaring (as if) starting (to)
pOtharumaa pOlE nI - go; like that you 
pUvaip pU vaNNaa * un - bilberry flower colored (from) your
kOyil ninRu iNGNGanE - temple standing in this manner
pOn^th aruLi * kOpputaiya - come (and) grace . Decorated
cIriya ciNGkaacanaththu - Great throne(You) 
irun^thu * yaam van^tha - Seated (on) our coming
kaariyam aaraayn^thu aruL -purpose examine (and) grace (us).
El Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu
Adopted and modified slightly from http://ushiveda.blogspot.com/2007/01/18-26.html
http://madhavipanthal.blogspot.com/2009/01/22.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp22.html
No comments:
Post a Comment