Monday, January 04, 2010

திருப்பாவை (Thiruppaavai 20)

"முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்"

பொருள்:
முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கும் துன்பம் வரும் முன்பு சென்று அவர்களின் துயரைப்  போக்கும் வலிமையுடையவனே! உன் உறக்கத்திலிருந்து எழுந்திராய்! தன்னிடம் அடைக்கலம் என்று வந்தோரை காப்பவனும், வலிமையுடையவனும் அவர்களின் பகைவருக்கு வெப்பம்  கொடுப்பவனுமான தூய்மையானவனே எழுந்திராய்! கலசம் போன்ற மென்மையான முலைகளையும், பவளம் போன்ற சிவந்த வாயினையும், அழகிய சிறு இடையினையும் கொண்ட நங்கை நப்பின்னையே! திருமகளே! நீ துயிலெழுந்து வந்து எங்கள் நோன்புக்கு தேவையான விசிறியும்(உக்கமும்),கண்ணாடியும்(தட்டொளி) கொடுத்து உன் மணாளனான கண்ணனும் நாங்களும் நீராட வழி செய்வாயாக!
muppaththu moovar amararkku mun senRu
kappam thavirkkum kaliyE thuyil ezhaay
seppam udaiyaay thiRal udaiyaay setraarkku
veppam kodukkum vimalaa thuyil ezhaay
seppenna men mulai(ch) chevvaay(ch) chiRu marungul
nappinnai nangaay thiruvE thuyil ezhaay
ukkamum thattoLiyum thandhu un maNaaLanai
ippOdhE emmai neeraattElOr embaavaay
muppaththu mUvar amararkku - Thirty three (crores of) immortals (gods)
mun cenRu *- (He who) goes to
kappam thavirkkum - fears (theirs) removes
kaliyE thuyilezhaay * - (You That) heroic one (please) wake up .
ceppam utaiyaay - Perfect one
thiRal utaiyaay * - Powerful
ceRRaarkku - enemies (He who)
veppam kotukkum - burn(s) gives (up) ,
vimalaa thuyilezhaay * - (You That) Kutram atravan (Flawless) (please) wake up .
ceppenna - Like a perfect vessel
men mulaic - soft breasts
cev vaayc - red lips
ciRu maruNGkul * - slender waist
nappinnai naNGkaay- (You) nappinnai (The Lord's consort) lady
thiruvE – (menmai porundhiya) beautiful (please)
thuyilezhaay * - wake up .
ukkamum thattoLiyum than^thu - Fan (and) mirror give (to us) (please also wake up)
un maNaaLanai * -your husband (The Lord)
ippOthE emmai nIraattu -right now (so) us (we can) bathe .
El Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu

Adopted and slightly modified from
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp20.html
http://ushiveda.blogspot.com/2007/01/18-26.html

No comments: