Tuesday, January 12, 2010

திருப்பாவை (Thiruppaavai 28, 29)


"கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்."
பொருள்: பசுக்களை மேய்த்துக் கொண்டு அதன் பின்னே சென்று காடுகளில் நாங்கள் ஒன்று கூடி உண்போம்.அதிகம் அறிவை பெறாத ஆயர்குலத்தை சேர்ந்தவர்களான எங்களுள் ஒருவனாக நீ பிறந்த புண்ணியம் செய்தவர்கள் நாங்கள். குறை ஒன்றுமில்லாத கோவிந்தனே நமக்குள் இருக்கும் இந்த உறவானது உன்னாலும், எங்களாலும் என்றும் ஒழிக்க முடியாதது. ஒன்றும் அறியாத பிள்ளைகளான நாங்கள் அன்பினால் உன்னை சிறு பெயரிட்டு அழைத்தால் எங்கள் மீது கோபம் கொள்ளாதே இறைவனே! நாங்கள் வேண்டும் பறை எங்களுக்கு அளிப்பாயாக.
kaRavaigaL pin senRu kaanam sErndhu uNbOm
aRivu onRum illaadha aay(k) kulaththu undhannai(p)
piRavi peRundhanai(p) puNNiyam yaam udaiyOm
kuRai onRum illaadha gOvindhaa undhannOdu
uRavEl namakku ingu ozhikka ozhiyaadhu
aRiyaadha piLLaigaLOm anbinaal undhannai
siRu pEr azhaiththanamum seeRi aruLaadhE
iRaivaa nee thaaraay paRaiyElOr embaavaay

kaRavaikaL pin cenRu- Cows following (them) (after)              
kaanam  cErn^thu uNpOm * - forest  reaching (we will) eat
aRivu onRum illaatha - enlightenment any not having,                 
aaykkulaththu * un^thannaip - (We the) cowherd community  you
piRavi  peRun^ thanaip - born    having been (to us)  (What)              
puNNiyam yaam utaiyOm * - good deeds (to) our (credit do we) claim 
kuRai  onRum illaatha  - fault  any   not 
kOvin^thaa * un^ thannOtu - having Govida your
uRavEl   namakku iNGku - relation to us   here (cannot) 
ozhikka ozhiyaathu * -break not possible
aRiyaatha piLLaikaLOm - innocent  children (we all)              
anpinaal * un^ thannai - (with) affection  you (with)
ciRu  pEr - short name (we)        
azhaiththanavum cIRi aruLaathE * - address do not be angry
iRaivaa! nI - O Lord   You (please) 
thaaraay paRai - give us  emancipation .
El Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu
 
"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்." 
 
 பொருள்: இந்த அதிகாலைப் பொழுதில் இங்கு வந்து உன்னை வணங்கி உன் தாமரை  
மலர் போன்ற திருவடிகளை நாங்கள் போற்றுவதன் காரணத்தை கேட்பாயாக! மாடு 
மேய்க்கும் ஆயர் குலத்தில பிறந்த நீ, நாங்கள் செய்யும் சிறு தொண்டுகளை மறுக்காமல் 
ஏற்றுக் கொள்வாயாக! கோவிந்தனே நாங்கள் உன்னிடம் அருள் வேண்டி இன்று மட்டும் 
வரவில்லை இனி என்றும், ஏழேழு பிறவிக்கும் உன்னோடு உறவு கொள்வோம், உனக்கு 
மட்டும் நாங்கள் பணி செய்வோம், இதை தவிர எங்கள் மற்ற விருப்பங்களை நீ மாற்றி
விடுவாயாக.
citram siRu kaalE vandhu unnai sEviththu un
potraamarai adiyE pOtrum poruL kELaay
petram mEyththu uNNum kulaththil piRandhu nee
kutru Eval engaLai(k) koLLaamal pOgaadhu
itrai(p) paRai koLvaan anRu kaaN gOvindhaa
etraikkum Ezh Ezh piRavikkum un thannOdu
utrOmE aavOm unakkE naam aatcheyvOm
matrai nam kaamangaL maatrElOr embaavaay
ciRRaNY ciRu kale - early morning hours (we)        
van^th unnai cEviththu * un - came  (and) You (we) worshipped  Your 
poRRaamarai atiyE pORRum - golden lotus feet  (we) praised  (the)          
poruL kELaay * - reason (for that) (please) hear
peRRam  mEyththu - (by) cattle rearing (those who)            
uNNum kulaththil  piRan^thu * nI - eat (that)community born (in which)You (were)
kuRREval eNGkaLaik - offerings (of) ours       
koLLaamal pOkaathu * - without taking don't go away (don't reject)
iRRaip paRai koLvaan - only for today  your grace  (we are)        
anRu kaaN kOvin^thaa * - not (desiring) Look O Govinda
eRRaikkum - forever 
Ezh Ezh piRavikkum * un thannOtu - seven (upon) seven births you together with
uRROmE aavOm - in peace (we) want to be,         
unakkE naam  aatceyvOm * - only to you  we will slave
maRRainam - other (of) our
kaamaNGkaL maaRRu - desires  (please) remove .
El Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu
  
Adopted from
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp29.html
http://ushiveda.blogspot.com/2007/01/27-29.html 

No comments: