Sunday, January 10, 2010

திருப்பாவை (Thiruppaavai 26)

"மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத் துன்பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெ ரும்பறையே, பல்லாண்டி சைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:
திருமாலே! நீலமணி போன்ற நிறமுடையவனே! மார்கழி நீராடி பாவை நோன்பை மேற்கொள்ள நாங்கள் வந்துள்ளோம், அதற்கு எங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாதெனில், உலகத்தையெல்லாம் நடுங்கச்செய்யும் ஒலி உடையதும், பால் வண்ணமும் கொண்ட உன் பாஞ்சசன்னியத்தை போன்ற சங்குகளும், பெரியதான வாத்தியங்களும்(பறை), பல்லாண்டு பாடுபவர்களும், மங்கல தீபங்களும், கொடிகளும், பந்தல்களும் ஆகியவையே. ஊழிக் காலத்தில் ஆலிலை மீது பள்ளிக் கொள்பவனே! இவற்றை நீ எங்களுக்கு தந்துருள வேண்டுகிரோம்.

maalE! maNivaNNaa! maargazhi neeraaduvaan
mElaiyaar seyvanagaL vEnduvana kEttiyEl
NYaalaththai ellaam nadunga muralvana
paal anna vaNNaththu un paancha sanniyamE
pOlvana sankangaL pOy(p) paadudaiyanavE
saala(p) perum paRaiyE pallaandu isaippaarE
kOla viLakkE kodiyE vidhaanamE
aalin ilaiyaay aruLElOr embaavaay

maalE! maNi vaNNaa! - (O) Lord (O) gem hued Lord!
maarkazhi nIraatuvaan * - Margazhi month (we who do the) penance
mElaiyaar ceyvanakaL - elders (as) done by
vENtuvana kEttiyEl * - what we want, if you ask (are) -
NYaalaththai ellaam - (making the) universe
natuNGka muralvana * - whole tremble (the) sound (made by)
paal anna vaNNaththu - milky white
un paaNYcacanniyamE * pOlvana caNGkaNGkaL – your panchajanyam like conches.
pOyp paatutaiyanavE * - powerful ?? not sure
caalap perum paRaiyE - very big drums
pallaaNtu icaippaarE * - singers singing “pallandu..”,
kOla viLakkE – oil lamps
kotiyE vithaanamE * - flags (&) big canopy
aalin ilaiyaay aruL – O Lord on Banyan leaf grace (us).
El Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu

Adopted and slightly modified from:
http://ushiveda.blogspot.com/2007/01/18-26.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp26.html

No comments: