Thursday, January 10, 2008

கோரைக்காலாழ்வான் கொடை, சொல்லிலக்கணம் மற்றும் விதண்டாவாதம்!

வாசகர்களே!! உண்மையா நான் எவ்வளோ பயந்தேன் தெரியுமா?? இலக்கணப் பதிவு எழுத ஆசைப்படுகிறோமே.. மக்கள் நம்மள 'வெண்ணை'ன்னு நினைச்சிடுவாங்களா? இல்ல..இன்னும் கடியாகி போயிடுவாங்களா? என்னென்னவோ யோசனை...இதையும் தாண்டி நம்ம மனசு என்ன சொல்லுதுன்னு பார்த்தா 'எழுது'ன்னு சொல்லுது. நீஙக ஒரு கண்ணோட்டமா இத Refresh செய்துக்கணும்னு தான் நான் விரும்பினேன். நம்ம ஆசைப்படுவது நடக்கும் போது எவ்வளோ சந்தோஷம் இருக்கு! நெஞ்சு வெடிக்கிற மாறி இருக்கும்..உயிர விட்டுடலாம்னு தோணும்.. ஆனா, அதுவே எதிர்பார்த்து, எதிர்பார்த்து எதுவுமே நடக்கவில்லைன்னா அது எவ்வளோ கொடுமைங்க..

சும்மா ஒரு கதை கேளுங்க!!
நான் சின்ன வயசுல இருக்கும் போது அம்மா ஆபீஸ்லேயிருந்து வந்து வாசல் 'கேட்'ட திறக்கும் சத்தம் கேட்கும். 'நாளைக்கு 'hero pen வாங்கி வரேன்னு சொன்னாங்களே.. வாங்கினாங்களோ இல்லையோ' என்ற ஆசையோடு, அம்மா கிட்ட மெதுவா பயந்து பயந்து செல்வேன் . தன் ‘சைக்கிள’ நிறுத்திட்டு களைப்பா உள்ள வந்த சில நிமிடங்களுல அம்மா பையை எட்டிப் பார்ப்பேன்.ஒண்ணும் தெரியாது . அத வெச்சு வாங்கலன்னு மனச தேத்திக்க மாட்டேன். 'வாங்கினா..குடுக்க மாட்டாளா ?? ஒருவேளை களைப்புல மறந்து போயிருக்கலாமே..கேக்கலாமா..வேண்டாமா ..கேட்டு இல்லன்னு சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்குமே..அம்மா வேலைக்கு நடுவுல நிறைய விஷயம் மறந்துடுவா ..நிறைய வாங்கியும் கொடுத்திருக்காங்க.. இன்னிக்கு என்னவோ'- இத்தனை யோசனைக்கு நடுவுல ஒரு தைரியம் வரும். அப்புறம் கேட்பேன் . 'அய்யோ..மறந்துட்டேம்மா'- அந்த Sincereaன பதில கேட்ட பிறகும், என்னவோ கேட்கக்கூடாதத கேட்டது போல துக்கம் தொண்டைய அடைக்கும். ஒரு நிமிஷம் கோபம் வரும்..நீங்களெல்லாம் 'போன ஜென்மத்துல கோரைக்கால் ஆழ்வாரா பிறந்திருக்கணும்'ன்னு தோணும். இப்போ யோசிச்சா சிரிப்பா இருக்கு. அதே, வாங்கி வந்திருந்தாலோ சந்தோஷம் எல்லை மீறிடும்.. இதெல்லாம் இந்த காலத்து குழந்தைகளுக்கு எங்க தெரியும். பணம் கையில..வாசலிலேயே கடை..அப்படியும், அம்மா அப்பா தான் வாங்க வேண்டிய சாமானா... ஒரு ''போன்' போட்டு ஞாபகப் படுத்திடலாம்.. அப்படியும் வாங்கலன்னா 'வீட்டும் வந்த பிறகு வண்டி எடித்துட்டு லொங்கு லொங்குன்னு போய் வாங்க சொல்லலாம். அதெல்லாம் ஓண்ணும் நடக்காது அந்தக் காலத்துல..அத விடுங்க!

நீங்கயெல்லாம் 'போன ஜென்மத்துல கோரைக்கால் ஆழ்வாரா பிறந்திருக்கணும்'- இதை எங்க அம்மா அவங்க அம்மாவை சொல்லி சலித்துக்கொள்வது ..பிறகு நான் கத்திகிட்டேன்…அது என்னனு தெரிஞ்சுப்போமா..(நானும் ஒளவையார இழுக்காம ஒரு பதிவாவது போடனும்ன்னு பாக்கறேன்.. முடியலயே)

கோரைக்கால் ஆழ்வார்ன்னு (கோரைக்கால் என்பது அவன் ஊர்) ஒரு ப்ரபு இருந்தானாம். அவன(ர) ஒளவையார் புகழ்ந்து பாடினார். அது கேட்டு ‘ஒரு யானையை பரிசா தரேன்..நாளைக்கு வா 'ன்னானாம். அடுதத நாள் போனா யானை ரொம்ப அதிகம்ன்னு தோணிப்போய் ' குதிரை தரேன், நாளைக்கு வா'ன்னு சொன்னானாம். அடுத்த நாள் அது ‘எருமை’ ஆகி, அதுக்கு அடுத்த நாள் ‘எருதாகி’, அதுக்கும் அடுத்த நாள் 'ஒரு புடவை தரேன்னு சொல்லி', கடைசி நாளன்று ஒரு திரிதிரியாய்ப் போன புடவைய குடுத்தானாம். அத ஒளவையார் பாட்டாக்கி அவன் மானத்த வாங்கிட்டார்..இல்ல..இன்னும் வாங்கிட்டு இருக்கார்..ஹீ ஹீ..பாட்ட பாருங்க..நல்லா இருக்கும்

"கரியாகி, பரியாகி, கார் எருமைதானாய் எருதாகி,

முழப் புடவையாகி, திரிதிரியாய்த்

தேரைக்கால் பெற்று மிகத் தேய்ந்து காலோய்ந்ததே

கோரைக்கால் ஆழ்வான் கொடை" - இந்த காலம் மாதிரி வசதி இல்லன்னாலும், நாங்க, வீட்டுல இதெல்லாம் நினைவு கூர்ந்து, சில சமயம் வேடிக்கையா சொல்லிக்காட்டி, வேண்டியத வாங்கிகிட்டோம்ல.. பாவம்..கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தும் இப்படி சலிச்சிட்டு இருந்திருக்கேன்..சரி, நம்ம இலக்கணத்துக்குப் போவோமா!!

இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 4

சொல் இலக்கணம் பார்த்துகிட்டு இருக்கோமுங்க..அதுல தான் 15. எத்தனை பால், தினை, எண் வருதுன்னு சொல்றாங்க!!

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்ன்னு பால் வகை அஞ்சுன்னும் தெரியும்.

உயர்திணை, அஃறிணைன்னு இரண்டு திணை.

ஒருமை, பன்மைன்னு இரண்டு எண். அதான் எனக்கு தெரியுங்களே!!- என்ன அறிவாளி முத்துலட்சுமி மாதிரி அங்க சொல்றீங்களா? எனக்கு கேக்குது!!

16. இடம்னு ஒண்ணு இருக்குங்க- தன்மை, முன்னிலை, படர்க்கை.. அதாங்க, First person, second person, third personறது!!

17. உங்களுக்கு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ன்னா Subject, predicate, object ன்னு ஞாபகம் இருக்கா? இது சொல்லிலக்கணத்துல வராது.. ஆனா, ஞாபகப்படுத்திகிட்டு போனா நல்லது.

சா: ராமன் ராவணைக் கொன்றான்.

Subject Object Predicate

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை

நம்ம நேத்து தொடங்கிய வினைச்சொல்ல இன்னிக்கு பீராஞ்சு பார்ப்போமா :)-

18. வினைமுற்று ன்னா?? (Finite verb): அதாவது, முழுதாக முடிஞ்ச வினை (action) அதுல 2 வகைங்க. 1. ஏவல் 2. வியங்கோள்.

1. முன்னால் நிற்பவரை ஏவுவது போல வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று. சா: பாடு, ஆடுவாய், உண்ணாதீர்.

2. ‘க, இய, இயல்’ எனற விகுதியுடன் வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் என்ற பொருட்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று சா: வாழ்க, ஒழிக, பொழிக, செய்க.

இன்னும் 20. தெரிநிலை வினை, குறிப்பு வினைன்னு ரெண்டு உண்டு.

தெரிநிலை வினை காலத்தைச் சரியாகக் காட்டும்.சா: ராமன் ராவணனைக் கொன்றான்.கொன்றான் - இறந்த காலம் . மேலும், கொன்றான் என்பது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம் என்ற ஐந்தையும் காட்டுகிறது.

அதுல 21. செயப்படுபொருள் (object) குன்றிய வினை (Intransitive Verb), செயப்படுபொருள் குன்றா வினை (Transitive verb) ன்னு ரெண்டு இருக்கு.

எதை, யாரை, எங்கு, எவற்றை -இந்த கேள்விக்கு எல்லாம் பதில் வரக்கூடிய வினை - செயப்படுபொருள் குன்றா வினை. சா: ராமன் ராவணனைக் கொன்றான்.

அந்த கேள்விக்கு பதிலில்லாம வருவது செயப்படுபொருள் குன்றிய வினை சா: கரும்பு இனித்தது. எதை, யாரைன்னு இங்க கேக்க முடியாது பாருங்க!!

காலத்தை குறிப்பாக மட்டுமே காட்டும் வினை குறிப்பு வினை சா: அவன் வல்லன். எப்போ வல்லவன் ? காலத்தை குறிப்பா தான் காட்டுது பாருங்க.

அது சரி, 22. வேற்றுமை(Case) ன்னா என்னங்க? நம்ம சொல்வோமே கழண்ட Case..அது இல்லீங்க!!

ஒற்றுமைக்கு எதிர்பதம்...சரி தான். அத, சான்றோட பார்ப்போமா!!

ராமன் கொன்றான்.

ராமனைக் கொன்றான். இங்க வந்த ஒரு' ஐ' ன்ற உருபு/எழுத்து பொருளை அப்படியே வேறுபடுத்தி காட்டிடுச்சு பாருங்க. அதைத்தாங்க, வேற்றுமை உருபுன்னு சொல்லுவாங்க. இதுல 8 எழுத்து இருக்கு. (சுலபமா ஞாபகம் வெச்சுக 'ஐ,ஆல்,கு,ன்,அது,கண், விளி' ன்னு சேர்த்து சொல்லுவோம்)

முதல் வேற்றுமை உருபு (Nominative case)– எழுவாய் (Subject)- இவைகளுடன் எந்த எழுத்தும் வராது. இருந்தாலும் வேற பொருள் தரும் சா: மக்கள் வந்தார். இங்க இது 'ஜனங்க' என்ற பொருளைத் தராது.

இரண்டாம் வேற்றுமை உருபு (Accusative case)- ‘’ சா: ராமனைக் கொன்றான்

மூன்றாம் வேற்றுமை உருபு (Instrumental case)-ஆல் சா: ராமனால் இறந்தான்

நான்காம் வேற்றுமை உருபு (Dative case)- கு சா: ராமனுக்குக் கொடு

ஐந்தாம் வேற்றுமை உருபு (Ablative case)- இன் சா: ராமனின் மனைவி

ஆறாம் வேற்றுமை உருபு (Genitive case)- அது சா: ராமனது பெண்

ஏழாம் வேற்றுமை உருபு (Locative case)- கண் சா: ராமனின் கண் உள்ளது (கண் - இடம் என்று பொருள்)

எட்டாம் வேற்றுமை உருபு (Vocative/ calling case)– விளி வேற்றுமை – மன்னா? இதில் ஆ என்பதை சேர்த்தவுடன் ‘அழைக்கிறோம்’ எனறு பொருள் மாறுகிறது பாருங்க..இதுக்கெல்லாம் அழகான ஆங்கில வார்த்தை குடுத்திருக்காங்க பாருங்க.. அத நிச்சயமா பாராட்டணுங்க..இன்னிக்கு இத்தோட நிறுத்துவோம் !!


தெரிந்தால் சொல்லுங்களேன் -4

1. விதண்டாவாதம்- இது தமிழ் வார்த்தையா? நேத்து, நான் யாரையோ திட்டினேன். அப்புறம், யோசிச்சேன். இதுக்கு என்ன பதஅர்த்தம்ன்னு. நான் கண்டுபிடித்த பதில்: விதண்டாவாதம்- வித்து+ அண்டா+வாதம்- வித்து (அறிஞர்+நெருங்கா+வாதம்). இது சரியா??அப்போ விவாதம் எப்படி வந்தது?

2. தமிழ் உணவுன்னு எடுத்துகிட்டா ஊர் வாரியா சாப்பாட்ட பிரிக்கலாம். மலைநாட்டு சாப்பாடு, செட்டிநாட்டு சாப்பாடு- அப்படி இப்படின்னு எதாவது அழகா பிரிச்சு, உணவு வகைகள் செய்முறைன்னு எதாவது இணையத்தளத்துல இருக்கா??

12 comments:

Geetha Sambasivam said...

//கரியாகி, பரியாகி, கார் எருமைதானாய் எருதாகி,

முழப் புடவையாகி, திரிதிரியாய்த்

தேரைக்கால் பெற்று மிகத் தேய்ந்து காலோய்ந்ததே

கோரைக்கால் ஆழ்வான் கொடை" - இந்த காலம் மாதிரி வசதி இல்லன்னாலும், நாங்க, வீட்டுல இதெல்லாம் நினைவு கூர்ந்து, சில//

பள்ளி நாட்களிலே படிச்சது, இந்தப் பாடல், அதுக்கப்புறம் என்னோட தனிப்பாடல் திரட்டு, என்ற புத்தகத்திலே இருந்தது. அது தொலைஞ்சதும், ஏதோ கையே ஒடிஞ்ச மாதிரி மனவருத்தத்தோடு இருந்தப்போ, சமீபத்தில், ஹிஹிஹி, 2 நாள் முன்னாலே தான், கேடிவியிலே "ஒளவையார்" படம் பார்த்தேன், பாதியிலே இருந்து தான் ,வழக்கம்போல், அதிலே நான் பார்த்த ஆரம்பக் காட்சியே இதான்! ரொம்பவே நன்றி, இத்தனை நாள் வரலைனு சொல்றீங்க, இனி நீங்க வராட்டியும், நான் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போறேன்.

dondu(#11168674346665545885) said...

"இனிது இனிது ஏகாந்தம் இனிது" என்று கூறிய இந்தப் பாட்டி, இச்செய்தியை ஊர் ஊராக எடுத்து சென்று, எல்லோரது ஏகாந்தத்தையும் கெடுத்து கூறி வந்தார் என அறிகிறோம். --- நன்றி கல்கி

அன்புடன்,
டோண்டு ராகவன்

R. Prabhu said...

Here it is priya http://rprabhu.blogspot.com/2005/10/power-of-aram-truth.html

Koraikaal azhwaan kodai and many others are quite interesting. Have some train of thoughts organised for Avaiyar, will post them soon. Good post. Will analyse about Vidhanda Vaadham and let you know

R. Prabhu said...

Avaiyar
The link seems truncated in the above comment so posting it again. Sorry :D

மணியன் said...

//ஆண்பால், பெண்பால், பலர்பால், பலவின்பால் பால்வகைன்னும் தெரியும்.//....ஒன்றன்பால் விட்டுப்போனதோ ?

சா: அவன்,அவள்,அவர்,அது,அவை

Anonymous said...

check this website

http://www.arusuvai.com

Krithika - Houston,TX

Maayaa said...

கீதா அவர்களே
ரொம்ப நன்றி. நான் இங்கயும் மற்றும் உங்க வலைத்தளத்துக்கும் நிச்சயமா அப்பப்போ வர முயற்சி பண்ணறேன்.
நீங்களாவது ஒளவையார் படம் பாத்துட்டீங்க. நான் இன்னும் பார்க்கலீங்க!!ஹீஹீ
ப்ரபு,
நன்றி. பார்க்க்றேன். ஒளவையாட் பதிவ போடுங்க. இதோ வந்துகிட்டே இருக்கேன்.

அய்யோ ஆமாம் மணியன் சார்!!
தெரியாம உட்டுட்டேன்..உண்மையா மறந்து தான் போச்சு!! ரொம்ப நன்றி.

anon,
naan poi paakaren!!thank you!!

Maayaa said...

மணியன் அவர்களே!!
சரி பார்த்ததற்கு மிக்க நன்றி. நல்ல வேளை நீங்க சொல்லிட்டீங்க..

SnackDragon said...

வித்து ‍ன்னா எப்படிங்க அறிஞர்னு சொல்றீங்க? எங்க வாசிச்சீங்க?
வித்துன்னா வித்துபோச்சுன்னு சொல்றோமே அதுதாங்க.

மேலே சொன்னதுதான் விதண்டாவாதம் :)


நட்சத்திர வாழ்த்துக்கள்

soorya said...

கொஞ்சம் பொறுங்க ப்ளீஸ்.
ஒழுங்கா எல்லாம் வாசிச்சிட்டு வாறன். ஒரு சின்ன சண்டை போடலாம்ணு தோணுது.
சொல்...கருத்து...பயன்.
இப்டி விற்கின்சைட் சொல்றார்.
ப்ளீஸ்...உங்களை இப்போதான் வாசிக்கிறேன் அப்புறமா வாறன் ஓகே.

soorya said...

http://en.wikipedia.org/wiki/Ludwig_Wittgenstein
இவரையும் ஒருக்கா வாசிப்பம்.
பிறகு சில முடிவுகளுக்கு வரலாமே.
நன்றி.

Maayaa said...

சூப்பர் கார்த்திக்ராமாஸ்!! ஹீ ஹீ