Monday, January 07, 2008

இரட்டைத் தாழ்ப்பாள், எழுத்திலக்கணம் மற்றும் புத்தகம் எங்கு கிடைக்கும்?

சும்மா கதை கேளுங்க!

மக்களே!! என்ன.. தமிழ் இலக்கணம் பேசி கொடுமை படுத்தறேன்னு நினைக்கறீங்களா?? “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாப்பாள்" கதையா இன்னும் இலக்கணத்துல வெறுப்பு வராம இருந்தா சரி..அது என்ன கதைன்னு கேக்கறீங்களா..ஏற்கனவே கடியில இருக்கும் ஒரு விஷயத்தை இன்னும் கடியேத்தற மாறி சொல்லி மொத்தமா ஆர்வத்த குறைப்பத தான் சொன்னேன். இது வழக்குல வந்த கதைய கேளுங்க!

குலோத்துங்க சோழனின் மனைவியான பாண்டியநாட்டு ராஜகுமாரி (பெயர் தெரியவில்லை) தன் குருவான புகழேந்திப் புலவரையும் தன்னுடன் சோழநாட்டுக்கு அழைத்து வந்திருந்தார். குலோத்துங்கனின் குருவான ஒட்டக்கூத்தர் ஒரு காரணமுமின்றி புகழேந்திப் புலவரை சிறையிலடைத்தார். அத கேள்விப்பட்ட ராணி, கோபத்துடன் அந்தப்புரத்தின் அறைக்குச் சென்று தாழ்ப்பாள் ஒன்றைப் போட்டு உள்ளிருந்தார். அக்காலத்தில, ராணி கோபம் கொண்டால், ராஜா, ஒரு புலவரை அழைத்து ராணியைப் பற்றி புகழ்ந்து பாடச்சொல்லி கோபத்தைக் குறைப்பது வழக்கம். அதன்வழியே ராஜா ஒட்டக்கூத்தரைப் வெளிநின்று பாடச் சொல்ல ராணியோ தனக்குள்ள கோபத்தின் மிகுதியால் இரண்டாவது தாழ்ப்பாளையும் போட்டாளாம். இத கவிதையோடஅழகா இங்க சொல்லி இருக்காங்க. Right Click செய்து பாருங்க! மறுமொழிகளைப் பார்த்தா நீங்க ஆர்வத்தோட இருக்கிற மாதிரி தான் தெரியுது..என்னவா இருந்தாலும் ‘இலக்கணத்தைப் பத்தி பேசணும்’ன்னு தீர்மானமா தான் இருக்கேன் நானும் :)-

இலக்கணம் ஒரு கண்ணோட்டம் -2

முதலெழுத்து, மாத்திரை எல்லாம் பார்த்தோம். 5. சார்பெழுத்து (Dependent letters) எத்தனைங்க?

சார்பெழுத்து 10 வகை:

1. உயிர்மெய் (Vowel-Consonant): 12 உயிர் * 18 மெய் = 216 எழுத்துகள் ( க முதல்..கா கி கீ... னௌ வரை)

2. ஆய்தம்(Guttaral): ஃ சா: அஃது, எஃது

3. உயிரளபெடை(vowel prolongation):

அது என்ன?? அளபெடையா?? அப்டீன்னா? செய்யுளில்(Poetry) சில இடத்துல ஒசையளவு குறைந்தாலோ /இனிமையான ஓசைக்காகவோ/சரியான பொருளுக்காகவோ ஒரு எழுத்து நீண்டு ஒலிப்பது ‘அளபெடை’ ன்னு சொல்லுவாங்க. அளபு+ எடை- நீண்ட அளவு எடுத்தல்.

உயிரளபெடை(உயிர்+அளபெடை): உயிர்நெடில் எழுத்துகள் (ஆ,ஈ,ஊ,ஏ,ஓ, ஐ, ஒள) இன்னும் நீண்டு ஒலிக்க அதன் குறில் வடிவத்தை சேர்த்துகிட்டா அது உயிரளபெடை. சா: கெடுப்பதூஉம், உரநசைஇ, ஈஇகை.

கெடுப்பதூஉம்- இங்க இனிமையா இருக்க 'த்+ ஊ' கூட 'உ' வ சேர்த்து சொல்லறோம். இது தாங்க ' இன்னிசை அளபெடை'.. நம்ம இத சினிமா பாட்டுல கேட்டு இருக்கோமே

4. ஒற்றளபெடை(Consonant Prolongation): ங், ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள், ஃ இவை அனைத்தும் 1/2 மாத்திரையிலிருந்து நீண்டு 1 மாத்திரைக்கு வந்தா அது ஒற்றளபெடை.

சா: அரங்ங்கம், மரம்ம்

5. குற்றியலுகரம் (Shorterned உ): சா: காசு-நம்ம கா'சு' kaas(u) ன்னு தானே சொல்வோம். காசூ(kaasU)ன்னு முழுக்க சொல்லமாட்டோம்ல. அதுதான் இது.
‘வல்லினமெய் (கு,சு, டு,து, பு, று) + உ’ வில் உள்ள 'உ', தனக்குரிய 1 மாத்திரை அளவு இல்லாம 1/2 மாத்திரையா குறைந்து ஒலிச்சா அது குற்றியலுகரம் - குறிய+இயல்+'உ'கரம்.

சா: காசு,வரகு, பாக்கு,சங்கு

6 குற்றியலிகரம் (Shortened இ): குற்றியலுகரத்துக்கு பின்னாடி 'ய' வந்தால், 'உ' என்பது ' இ' யாக திரிந்து 1/2 மாத்திரையா குறைஞ்சு ஒலிக்கும். இது தான் குற்று+இயல்+இகரம்.

சா: நாடு (ட்+உ)+யாது = நாடியாது 'டி'ய கவனிங்க
குழலினிது+ யாழினிது = குழலினிதி யாழினிது – ‘தி’ய கவனிங்க!!

7. ஐகாரக்குறுக்கம் (Shortened ஐ): 'ஐ' யோட ஓசை குறைஞ்சு வந்தா ஐகாரக்குறுக்கம்.

சா: ஐந்து, தலைவன், வலை. இதுல எல்லாம் ஐ 2 மாத்திரையிலிருந்து குறைஞ்சு வருது பாருங்க

8. ஒளகாரக்குறுக்கம்(Shortened ஓள): 'ஒள' ஓசை குறைஞ்சு வந்தா ஒளகாரக்குறுக்கம்.

சா: ஒளவை, கௌதாரி. இதுல எல்லாம் ஒள 2 மாத்திரையிலிருந்து குறைஞ்சு வரும்

9. மகரக்குறுக்கம்(Shortened ம்): 'ன'கர, 'ண' கரத்திற்கு பின்னாடி 'ம்'கரம் வந்தா 'ம்' ஓசை குறைஞ்சு 1/2 மாத்திரையிலிருந்து 1/4 மாத்திரையா வருவது மகரக்குறுக்கம்.

சா: போன்ம் (போலும் எனபதைக் குறிக்கும்) என்ற சொல்லில் 'ம்' ஒலி மெலிதாகத் தான் கேட்கும்

10.ஆய்தக்குறுக்கம்(Shortened ஃ): குறில் + ல்/ள் + 'த'கரம் வந்தால் = ஆய்த எழுத்து வரும். அதுவும் கம்மி ஒலியோட வரும்.

சா: அல் + திணை -அஃறினை. இதுல் 'அல்' நிலைமொழி, அதாவது ஏற்கனவே இருப்பது. திணை - வருமொழி, அதாவது வந்து சேருவது. அல்+ திணை = 'அ'- குறில் + ல் + 'தி' வருதா!! இப்போ அஃறினையா மாறுவதோடு இல்லாம குறுகிய ஓசையோடு வருதா. அதாங்க!!! சரி, அடுத்த பகுதியை நாளைக்கு பார்க்கலாம்

தெரிந்தால் சொல்லுங்கள் -2

தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னையில, சங்க கால இலக்கியம்/ஐப்பெரும்காப்பியம் போன்ற நூல்கள் /சரித்திர புதினம் எங்கெங்க(க்டைகள்) கிடைக்கும் தெரியுமா? நான் ஏதாவது புத்தகக் கண்காட்சி வந்த போது மட்டுமே புத்தகம் வாங்கியிருக்கேன். கடைகளின் முகவரிகள் இருந்தால் கொடுங்களேன்?!!!

20 comments:

விருபா / Viruba said...

இங்கே பல பதிப்பகங்கள் உள்ளன. அதற்கப்பால் வேண்டியதை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல !! ரொம்ப ரொம்ப நன்றி விருபா!!!

Anonymous said...

Priya,

Check Project Madurai..

http://www.tamilnation.org/literature/projectmadurai/indexpmsubject.htm

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

anon,
thank u so much..

naan idha paathiruken munnaame..


adhuve chronologicalaa inga: http://www.tamilculturewaterloo.org/documents/tamil_links/list_literature.pdf

மாதங்கி said...

international intstitute of tamil studies, Tharamani

Dr. U.ve. saa library
2, Arundale Beach Road, Besant Nagar, Chennai 600 090
ph: 91/44/ 24911697

மாதங்கி said...

international intstitute of tamil studies, Tharamani

Dr. U.ve. saa library
2, Arundale Beach Road, Besant Nagar, Chennai 600 090
ph: 91/44/ 24911697

cheena (சீனா) said...

இலக்கணம் கற்க ஈடுபாடு வேண்டும். ஈடுபாட்டை உருவாக்கும் சூழ்நிலை அமைந்தால் கற்பது எளிது.

R.Prabhu said...

Priya

Nalla post about Thamizh Ilakkanam!!! Btw for embedding player in your site pls use http://www.boutell.com/xspf/ read the instructions it should be pretty clear. Also see the other comment in my blog

ஜீவி said...

மிக எளிமையான வழிகாட்டல்கள்.
வாழ்த்துக்கள்.

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

நன்றி மாதங்கி அவர்களே! குறித்துக் கொண்டுள்ளேன்

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

சீனா அவர்களே!

ஈடுபாடு வர மாறி இருக்கா??

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

ப்ரபு,
நிச்சயமா பார்க்கிறேன். நன்றி

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

ஜீவி அவர்களே!
மிக்க நன்றி

Mani RKM said...

"ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டை தாழ்பாள்" என்பதற்கு அரசி ஒருவர் கோபம் கொண்டு இரண்டாவது தாழ்பாள் போட்டார் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு உண்மை அர்த்தம் என்னவென்றால், ஒட்டக்கூத்தர் எழுதும் புதிர் போன்ற பாட்டுக்களுக்கு இரு வகையில் அர்த்தம் கொள்ளலாம். அதாவது இரு வேறு விதங்களில் புதிரை அவிழ்க்கலாம்/திறக்கலாம். இது என் தமிழ் ஆசிரியை அவர்கள் சொல்லியது. "ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டை தாழ்பாள்" -- இவ்வரிகளின் இரண்டாவது அர்த்தமிது :)


உங்கள் முயற்சி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

விருபா / Viruba said...

இரட்டை தாழ்பாள் எடுத்துக்காட்டாக கி.வா.ஜ வின்

"காசாலேசா" கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

மணி அவர்களே,
இது எனக்கு தெரியாதே..வேற எடுத்துக்காட்டு (ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு) தெரிஞ்சா சொல்லுங்களேன்.

விருபா அவர்களே!!
எனக்குப் புரியலே நீங்க சொல்வது?!!

விருபா / Viruba said...

"காசாலேசா"

1. காசாலே சா >> (காசு = பணம்) பணம், பணம் என்று தேடி அதனால் இறப்பு
2. காசா? லேசா? >> பணம் சம்பாதிப்பது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமா என்ன?

குமரன் (Kumaran) said...

அப்பாடா. இந்த கட்டுரையை மக்களேன்னு தொடங்கியிருக்கீங்க போன தடவை மாதிரி வாசகர்களேன்னு தொடங்கியிருந்தா உங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடலாம்ன்னு இருந்தேன். :-)

இந்தக் குறுக்கங்கள் எல்லாம் எனக்கு எப்பவுமே புரியறதில்லை. இப்பவும் புரியலை. ஒவ்வொன்னும் எப்படி, ஏன் அப்படி சொல்றோம்ன்னு புரியுது. ஆனா புழக்கத்துல ஏன் அப்படின்னு இதுவரைக்கும் புரியலை.

நான் ஜீன் 2007 சென்னைக்கு வந்த போது பனகல்பார்க் பக்கத்துல இருக்கும் தணிகாசலம் தெருவுலயும் அந்த சுத்துவட்டாரத்துலயும் இருக்கும் சில பதிப்பகங்களுக்குப் போய் கேட்டுப் பார்த்தேன். சங்க இலக்கியங்கள் அவ்வளவா கிடைக்கலை. ஆனா ஒன்னு ரெண்டு சின்ன சின்ன அறிமுகப் புத்தகங்கள் கிடைத்தன. அங்கே போய் கேட்டுப் பாருங்க.

விருபாவின் ரெட்டைத் தாழ்ப்பாள் எடுத்துக்காட்டும் விளக்கமும் அருமை.

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

ஆமாம்..சரி,போய் பார்க்கறேன் குமரன் அவர்களே!

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

ஒஹோ...இப்ப புரியுது விருபா!!