Wednesday, January 02, 2008

திருப்பாவை (Thiruppaavai) - 5, 6, 7, 8

"மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று அணிவிளக்கை
தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்."

பொருள்:மாயங்கள் புரிபவனை, வட திசையில் உள்ள துவாரகையின் அரசனானவனை, தூய்மையான நீரான  யமுனை நதிக்கரையில் இருப்பவனை, இடையர் குலத்தினில் தோன்றிய அழகான விளக்கினை, தேவகியின் வயிற்றில் தோன்றி பிரகாசிக்க செய்த தாமோதரனை, நாம் தூய்மையோடு மலர் தூவி தொழுது, அவன் பெயரினை பாடி, மனதினால் அவனையே சிந்தித்தால், இது வரை செய்த பிழைகளும் இனி வரப் போகும் பாவங்களும் இப்போது செய்கின்றனவும்  தீயிலிட்ட தூசியாய் அழிந்துவிடும். அவன் பெயரைச் செப்புவாயாக !!

maayanai mannu vada madhurai maindhanaith *
thooya peru neer yamunaith thuRaivanai *
aayar kulaththinil thOnRum aNi viLakkaith *
thaayaik kudal viLakkam seydha dhaamOdharanaith *
thooyOmaay vandhu naam thoomalar thoovith thozhudhu *
vaayinaal paadi manaththinaal sindhikkap *
pOya pizhaiyum pugudharuvaan ninRanavum *
theeyinil thoosaagum ceppElOr embaavaay.

Translation
Word for Word meaning
maayanai -One of wondrous deeds; magician
mannu -associated with
vada madhurai -northern Mathura
maindhanai -prince (lit. son)
thooya -pure
peru -great, deep
neer -water(s)
yamunai -the river Yamuna
thuraivanai -one who has his abode on the banks
aayar kulaththinil -in the cowherd community
thOnRum -appeared
aNi -auspicious, sacred
viLakkai -light
thaayai -mother
kudal -womb
viLakkam -seydha polish, brighten
dhaamOdharanai -Damodara, the one who's belly was tied with a string
(an epithet of Krishna)
thooyOm -pure
aay -becoming
vandhu -coming
naam -we
thoo -pure
malar -flowers
thoovi -offering (lit. sprinkling)
thozhudhu -worshipping
vaayinaal -with the mouth (verbally)
paadi -singing
manaththinaal -with the mind (mentally)
sindhikka -thinking
pOya -past
pizhaiyum -sins
pugutharuvaan -yet to come
ninRanavum -are
theeyinil -in fire
thoosu -cotton
aagum -will become
ceppu (therefore let us) say (his names)
el - do
or empaavaay - the penance of Paavai Nonbu

6. "புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ் சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."

   பொருள்: பறவைகளும் சிலம்பிக் கொண்டு இரை தேடப்  புறப்பட்டன. கருடனின்(புள்ளரையன்) தலைவனான இறைவனின் கோவிலில் இருந்து வரும்  வெண்மையான நிறம் கொண்ட சங்கின் ஒலி(பேரரவம்) கேட்கவில்லையோ? பெண்ணே எழுந்திரு! பூதலை கொடுத்த  முலைப் பால் நஞ்சினை உண்டு, கள்ளச் சகடத்தின் (சக்கரத்தின்) தீங்கு அழியுமாறு காலினை உயர்த்தி உதைத்து,  திருப்பாற்கடலில் பாம்பின் மேல் அமர்ந்தவனை உள்ளத்தில் கொண்டு எழுந்து 'அரி,அரி' என்று முனிவர்களும்,யோகிகளும் அழைக்கும் பேரொலி, நம் உள்ளம் புகுந்து குளிர வைக்கிறது.

puLLum silambina kaaN puLLum silambina kaaN puLLaraiyan kOyilil *
veLLai viLisangin pEraravam kEttilaiyO *
piLLaay ezhundhiraay pEy mulai nancundu *
kaLLac cakatam kalakkazhiyak kaalOcci *
veLLaththaravil thuyilamarndha viththinai *
uLLaththuk kondu munivargaLum yOgigaLum *
meLLa ezhundhu "ari" enRa pEraravam *
uLLam pugundhu kuLindhElOr embaavaay.

Translation
Word for Word meaning
puLLum -the birds too
silambina -are calling
kaaN -look!
puL araiyan -the king of the birds (Garuda, Lord Vishnu's vehicle)
kOyilil -in (Garuda's) palace
veLLai -white
viLi -calling (vilikkum)
sangin -conch's
pEr aravam -great noise
kEttilaiyO didn't you hear?
piLLaay -O girl!
ezhundhiraay -get up!
pEy -demon (Putana, the female rAkshasi sent by Kamsa to kill
the baby Krishna by having him drink from her poisoned
breasts)
mulai -breast
nancu -poison
undu -ate
kaLLa-evil
cakatam -Wheel (SakaTAsura, an asura who came in the form of a cart to kill Krishna)
kalakku azhiya -destroy its move
kaal -feet
Occi -kicked (raised)
veLLaththu -in the waters (the milk ocean)
aravil -on the snake
thuyil -asleep
amarndha -resting, seated
viththinai -the cause, seed (of the universe)
uLLaththu -in the heart
kondu -keeping
munivargaLum -sages, those who think about the Lord all the time
yOgigaLum -ascetics, those adept in meditation (Sanskrit: yOgi)
meLLa -gently
ezhundhu -getting up
ari -Hari, a name of Lord Vishnu
enRa -saying
pEr aravam -great noise
uLLam -our hearts
pugundhu -entering
kuLirndhu -cool

திருப்பாவை பாடல் - 7

"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப்பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்."

பொருள்:அதிகாலையில் ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் கீசுகீசு என்று தமக்குள்ளே பேசும் சத்தம் கேட்கவில்லையோ பேய்ப்பெண்ணே? காசு மாலையும், பிறப்பு என்ற அணிகலனும்  கலகலவென்று ஒலியெழுப்ப, கை அசைந்த நறுமணமுள்ள கூந்தலை உடைய இடையக்குல(ஆய்ச்சியர்) பெண்கள் மத்தினால் தயிர்கடையும் சத்தம் கேட்கவில்லையோ? நாயகப் பெண் பிள்ளை நீ !! நாராயணனான கேசவனின் புகழ் பாடுவதைக்  கேட்டும் நீ இன்னும் உறங்குகிறாயோ பெண்ணே? பொலிவு கொண்டவளே!! நீ  கதவைத்  திறவாய்!

keecu keecu keecu keecu enRu engum aanaic caaththan * kalandhu
pEsina pEccaravam kEttilaiyO pEyp peNNE *
kaasum piRappum kalakalappak kai pErththu *
vaasa naRuNGkuzhal aaycciyar * maththinaal
Osai paduththa thayiraravam kEttilaiyO *
naayakap peN piLLaay naaraayaNan moorththi *
kEsavanaip paadavum nee kEttE kidaththiyO *
dhEsamudaiyaay thiRavElOr embaavaay.

Translation
Word for Word meaning

keecu keecu enRu - chirping sound (an onomatopoeia)
engum -everywhere
aanaiccaaththan -birds of a particular type, known as "valiya" in Tamil or "bharadvAja"
in Sanskrit
kalandhu -together
pEsina pEccu -saying words, talking
aravam -sound
kEttilaiyO -didn't you hear?
pEy peNNE -hey spellbound girl!
kaasum -(garlands of) auspicious coins
piRappum -cylindrical golden jewelry(two kinds of wedding necklaces)
kalakalappa -the jingling sound of ``kala kala''
kai -hands
pErththu -moving
vaasa naRum -very fragrant (lit. "fragrant fragrant")
kuzhal -hair
aaycciyar -cow girls (gopikas)
maththinaal -using the churning rod
Osai paduththa -making noise
thayir -yogurt
aravam -sound
kEttilaiyO -don't you hear?
nayaka -leader
peN piLLaay! -O girl!
naaraayaNan -Narayana's
moorththi -descent (avatAra) (lit. form)
kEsavanai -about Kesava (one of the principal names of Narayana
/ Lord Vishnu)
paadavum -singing
nee -you
kEttE -even while listening
kidaththiyO -are you lying down?
dhEsam -splendor (Sanskrit: tejas)
udaiyaay-you who are with
thiRa -open (the door)

திருப்பாவை பாடல் - 8
"கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடையபாவாய்
எழுந்திராய் பாடிப்பறை கொண்டுமாவாய் பிளந்தானை
மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம்
சேவித்தால்ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்."

பொருள்: கிழக்கு வானம் வெளுத்து விட்டது. புல் மேய்வதற்காக எருமைகள் சிறு தூரம் சென்று பரந்து கிடப்பதைக்  காண்பாயாக!  மீதம் உள்ள பெண்களையும், பாவை நோன்பை மேற்கொள்ள போகின்றவர்களையும் போகாமல் தடுத்து உன்னை அழைக்க உன் வாசலிலே நிற்கின்றோம்! குதூகலம் உடைய பெண்ணே எழுந்திராய்! குதிரை வடிவில் வந்த ஒரு அசுரனை இரண்டாய் பிளந்தவனை, மல் வீரர்களைக் கொன்ற அந்த தேவாதி தேவனின் புகழ் பாடி நாம் அவனை வணங்கினால், அவன் நம் மீது 'ஆ' 'ஆ' வென்று   அன்புடன் நம் நிலையை ஆராய்ந்து அருள் செய்வான்.

keezh vaanam veLLenRu erumai siRu veedu *
mEyvaan parandhana kaaN mikkuLLa piLLaigaLum *
pOvaan pOginRaarai(p) pOgaamal kaaththu * unnai(k)
koovuvaan vandhu ninROm * kOdhugalam udaiya
paavaay ezhundhiraay paadi(p) paRai kondu *
maavaay piLandhaanai mallarai maattiya *
dhEvaadhi dhEvanai(ch) chenRu naam sEviththaal *
aavaavenRu aaraayndhu aruL ElOr em paavaay!

Word for Word meaning
keezh vaanam -eastern sky
veL endru -brightening
erumai -buffaloes
siRu veedu -let go for a short time(buffaloes and cows are let go to graze
for a short time in the morning before they are milked)
mEyvaan -to graze
parandhana -spread
kaaN -look
mikkuLLa -those who are remaining
piLLaigaLum -girls
povaan -those who want to go
pOginRaarai -who are going
pOgaamal -without going
kaaththu -waiting
unnai -you
koovuvaan -to call
vandhu -have come
ninROm -we are standing
kOdhugalam -happy (enthusiastic)
udaiya -with
paavaay -O girl!
ezhundhiraay -get up!
paadi -sing
paRai kondu -to get the blessing
maavaay -big mouth
piLandhaanai -he who split
mallarai -wrestlers
maattiya -vanquished
dhEvaadhi dhEvarai -God of gods
chenRu -having gone
naam -we
sEviththaal -if we serve, worship
aavaavenRu -with great compassion, concern ("aa aa" enRu) (saying "Ah, ah!")
aaraayndhu -having looked into
aruLel -Will grace
Or Empaaavaay - the penance of Paavai Nonbu

Adopted from the following sites and edited here and there.
http://www.ramanuja.org/sv/alvars/andal/tiruppavai/verse8.html
http://ushiveda.blogspot.com/2006/12/6-11.html

3 comments:

cheena (சீனா) said...

திருப்பாவைப் பாடல்கள் பொருளுடன், ஆங்கில மொழியாக்கமும் சேர்த்துத் திகட்டத் திகட்ட படைத்திட்ட ப்ரியாவிற்கு நன்றி

Anonymous said...

Why dont u translate the poetry itself? You have trnsliterated it in Roman scripts only.

If you feel that others whose mother tongue is not Tamil, may also read it, then you can have given the translation of the poem itself.

If you cant translate, because it is poetry, I know it is difficult, you can put in here the translations done by others already, and I hope you know a few.

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

thanks cheena!!

anon,
no, i did not do anything.. just cut pasted from the links given below..i mentioend that in my first post of thiruppaavai!!
timee illa..padichu purinjunda piragu just cut pasting avlodhaan!!