புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளந் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்
பொருள்:
பறவையாய் வந்த பகாசுரன்என்னும் அரக்கனின் வாயை இரண்டாக பிளந்தவனும், பொல்லாத அரக்கனானஇராவணின் பத்து தலைகளையும் கிள்ளி எறிந்தவனுமானவனின் புகழைப் பாடிக் கொண்டு பெண் பிள்ளைகள் எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்துக்கு கூடி இருக்கிறோம். விடியற்காலையான இப்பொழுதில் சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்) உச்சிக்கு வந்துகுரு(வியாழன்) மறைந்துவிட்டது. பறவைகள் எல்லாம் இரை தேட சிலம்பிக் கொண்டு புறப்பட்டுவிட்டன, அழகிய மலரில் மீது வண்டு உறங்குவது போன்ற கண்களைஉடையவளே! இந்த நல்ல நாளிலே நன்கு முழுகி நீராடாமல் இன்னும் படுக்கையில்கிடக்கிறாயே, தனியே இருந்து கபடம் நினைக்காமல் எங்களோடு சேர்ந்து நீராடவருவாயாக!
உங்கள்புழக்கடை (வீட்டின் பின் புறம்) தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர்(தாமரை) மலர்கள் விரிந்தும், ஆம்பல்மலர்கள் குவிந்தும் விட்டன. காவி நிறத்தில் தோய்ந்த ஆடைகளை உடுத்துபவரும், வெண்மையான சாம்பல் (வீபூதி) அணிந்த தவம் செய்யும் துறவிகள் தங்கள்திருக்கோயில்களில் ஆராதனை செய்ய புறப்பட்டு விட்டனர். நீராடுவதற்கு எங்களை'எழுப்பி விடுவேன்' என்று சொல்லி வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொண்டநங்கையே! எழுந்திராய்! சொன்னதை செய்யவில்லையே என்ற நாணம் சிறிதும்இல்லாதவளே !! நீ விரைவில் எழுந்து சங்கையும், சக்கரத்தையும்ஏந்தியுள்ள பரந்த கைகளை உடையவனும், அழகிய தாமரை மலர்போன்ற கண்களை கொண்டவனுமான கண்ணனின் புகழ் பாடுவாயாக!
இளங்கன்றை ஈன்ற எருமையானது தன் கன்றை நினைத்து வருந்துகையில் மடியில் தானாக பால்
வடிய அதனால் வீடே சேறாகும் அளவுக்குச் செல்வம் கொண்டவனின் தங்கையே!! எங்கள் தலையில் பனி விழ உன்
வீட்டு வாசலில் காத்திருக்கிறோம். சினம் கொண்டு அந்த இராவணனை(தென்னிலங்கை
கோமானை) கொன்ற மனதுக்கு இனியவனான (இராமனை) பாடி புகழ, நீ வாய் திறவாமல்
இருக்கிறாய். இனி..பெண்ணே எழுந்திராய்! இது என்ன பெரும் உறக்கம்? நீ இப்படி
உறங்குவதைப் பற்றி அனைத்து இல்லத்தினருக்கும் தெரிந்து விட்டது.
Song 12 :
kanaiththu iLaNG kaRRerumai kanRukku iraNGki
ninaiththu mulai vazhiyE ninRu paal cOra
nanaiththu illam cERaakkum naR celvan thaNGkaay
panith thalai vIzha nin vaacaR katai paRRic
cinaththinaal thennilaNGkaik kOmaanaic ceRRa
manaththukku iniyaanaip paatavum nI vaay thiRavaay
iniththaan ezhun^thiraay Ithenna pEruRakkam
anaiththu illaththaarum aRin^thu ElOr empaavaay.
Kanaithu -calling out
iLam - young
kaRRu erumai - crying buffaloes
kanRukku irangi - for the calves showing motherly affection
ninaiththu mulaivazhiyE- thinking (of those calves) (their) through their breast them
NinRu - standing
paal cOra - milk flows
nanaithth illam cER aakkum - Wet the house and make it swampy
naR celvan thangaai - good prosperous cowherd's sister!
pani ththalai vIzha - mist (on our) heads (is) falling
nin vaacaR kadai paRRic - your outside entrance (are) holding on to.
cinath thinaal - because of anger
thenn ilangaik kOmaanaic - Southern Lanka's ruler
ceRRa - destroyed (by the Lord)
manath thukku iniyaanaip - the lord whose thoughts bring sweetness
கன்றுகள் ஈன்ற கறவைப்பசுக் கூட்டங்களிடம்(கணங்கள்) குறைவில்லா பால் கறந்து,பகைவரின்(செற்றார்)திறன் அழிய அவர்களோடு போர் செய்யும், குற்றங்கள்ஏதுமில்லாத இடைக்குலத்தை சேர்ந்த பொன் கொடி போன்ற அழகானவளே! காடுகளில்திரியும் அழகிய மயிலை போன்றவளே! உன் தோழிகள் அனைவரும் உன் வீட்டுமுற்றத்தில் வந்து கூடி அழகிய மேகத்தைப்(முகில்) போன்ற நிறம் கொண்டகண்ணின் புகழ் பாடும் பொழுதில் செல்வம் நிறைந்த பெண்ணே நீ சிறிதும்அசையாமலும், பேசாமலும் ஏன் உறங்குகிறாய்?
kaRRuk kaRavaik kaNangaL pala kaRandhu
ceRRaar thiRalazhiyac cenRu ceruc ceyyum
kuRRam onRillaadha kOvalartham poRkodiyE
puRRaravalkul punamayilE pOdharaay
cuRRaththu thOzhimaar ellaarum vandhu nin
muRRam pugundhu mugilvaNNan pEr paada
pala kaNangaL many herds
kaRandhu milked
ceRRaar enemies'
thiRal strength
azhiya that wipes out, destroys
cenRu by going
ceru ceyyum doing battle
kuRRam fault
onRu illaadha without a single
kOvalar tham of the cowherds
pon kodiyE O you (who are like a) golden creeper!
puRRu nest, a mound that is a resting place for a snake
aravu snake (that is just coming out of the mound)
alkul waist
puna mayilE O you (who is like a) forest peacock!
pOdharaay Come out!
cuRRaththu relatives (near and dear)
thOzhimaar girlfriends
ellaarum all
vandhu are here
nin your
muRRam inner courtyard, living space of a house
pugundhu have entered
mugil vaNNan the One who is colored like a dark raincloud
pEr paada singing (his divine) names
siRRaadhE without stirring
pEsaadhE without speaking
celvap peNdaatti fortunate girl
nee you
eRRukku for what reason
uRangum poruL your goal of sleeping
மேலுள்ள படங்களைப் பாருங்கள். இது தாய்லந்து நாட்டு பேங்காக் நகரத்தின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் உள்ள ஒரு கலை உருவம் (structure). இப்பாடலுக்குப் பொருந்தும் வண்ணம் அற்புதமாக உள்ளது.
பதவுரை: மடந்தாழும் -மடம் தாழும் - மடமை(அறியாமை) தங்கும் நெஞ்சத்துக் -நெஞ்சம் கொண்ட கஞ்சனார் -கம்சனின் வஞ்சம் -சூழ்ச்சிகளை கடந்தானை -முறியடித்தவனை நூற்றுவர்பால் -நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் நாற்றிசையும் -நாங்கு திசைகளிலும் (உள்ளவர்கள்) போற்றப் -புகழ படர்ந்து ஆரணம் -சென்று வேதங்கள் முழங்கப் -ஒலிக்க பஞ்சவர்க்குத் தூது -பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக நடந்தானை - நடந்து சென்றவனை ஏத்தாத -புகழ்ந்து பாடாத (துதிக்காத) நாவென்ன நாவே - நாக்கும் ஒரு நாக்காகுமா!! நாராயணா வென்னா -நாராயணா என்று சொல்லாத நாவென்ன நாவே -நாக்கும் ஒரு நாக்காகுமா!!
பொருளுரை: அறியாமை தங்கும் நெஞ்சம் கொண்ட கம்சனின் சூழ்ச்சிகளை முறியடித்தவனை, நூற்றுக்கணக்கானவர்களுடன் சென்று, நாங்கு திசைகளிலும் உள்ளவர்கள் புகழ, வேதங்கள் ஒலிக்க, பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக நடந்து சென்றவனை புகழ்ந்து பாடாத நாக்கும் ஒரு நாக்காகுமா!! நாராயணா என்று சொல்லாத நாக்கும் ஒரு நாக்காகுமா!! முற்றும்
பதவுரை: பெரியவனை - அனைவரைக் காட்டிலும் பெரியவனை மாயவனைப் - மாயங்கள் செய்பவனை பேருலக மெல்லாம் - பெரிய உலகங்களெல்லாம் விரிகமல - விரிக்கின்ற தாமரை மலர் ( மேலுள்ள பிரம்மாவினை) உந்தியுடை - வயிற்றில் கொண்டவனை விண்ணவனைக் - வானவனை கண்ணும் - கண்களும் திருவடியும் - திருவடிகளும் கையும் - கைகளும் திருவாயும் - திருவாயும் செய்ய - சிவக்க கரியவனைக் - கரிய நிறத்தவனை காணாத - காணாமல் உள்ள கண்ணென்ண கண்ணே - கண்களுமென்ன கண்களா!! கண்ணிமைத்துக் - கண்களினை இமைத்து காண்பார் தம் - காண்கின்றவர்களின் கண்ணென்ண கண்ணே - கண்களென்ன கண்களா!!
பொருளுரை: அனைவரைக் காட்டிலும் பெரியவனை, மாயங்கள் செய்பவனை, பெரிய உலகங்களெல்லாம் உருவாக்கும் தாமரை மலர் மேலுள்ள பிரம்மாவினை வயிற்றினில் கொண்டவனை..வானவனை.. கண்களும், திருவடிகளும், கைகளும், திருவாயும் சிவக்க, கரிய நிறத்தவனைக் காணாமல் இருக்கும் கண்களுமென்ன கண்களா!!(கண் கொட்டாமல் காணவேண்டிய அழகினை) கண்களினை இமைத்து காண்பவர்களின் கண்களென்ன கண்களா!!
பதவுரை: மூவுலகும் - மூன்று உலகும் ஈரடியான் - இரண்டு அடிகளால் முறை - முறைப்பட்டு நிரம்பா - நிரம்பாத (தை) வகைமுடியத் - முற்றும்(முடிக்கும்)வண்ணம் தாவிய - தாவிய சேவடி - சிவந்த திருவடி சேப்பத்- சிவக்கும் வண்ணம் தம்பியொடுங்- தம்பியோடு (இலக்குவனோடு) கான்போந்து -கானகம் புகுந்து சோவரணும் - சோ என்ற அரணும் (அதில் வாழும் மக்களும்) போர்மடியத் - போரில் இறக்க தொல்லிலங்கை - தொன்மையான இலங்கையின் கட்டு அழித்த - கட்டுக்காவலையும் அழித்த சேவகன் - வீரன் சீர் கேளாத - புகழ் கேளாத செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!! திருமால் சீர் கேளாத - அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!
பொருளுரை: மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம் தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?!! தொடரும்..
பதவுரை: திரண்டு அமரர் - தேவர்கள் கூடி தொழுது ஏத்தும் - வணங்கி போற்றும் திருமால் - திருமால் நின் செங்கமல - தங்களின் செம்மையான தாமரை மலர் இரண்டடியான் - இரண்டு அடிகளால் மூவுலகும் - மூன்று உலகும் இருள்தீர நடந்தனையே - இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே நடந்தஅடி - (அப்படி) நடந்த அடி பஞ்சவர்க்குத் - பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக - (குருவம்ச/அஸ்தினாபுர சபைக்கு)தூதாக நடந்தஅடி - நடந்து சென்ற அடிகளாம் மடங்கலாய் - (நர)சிம்மமாய் வந்து மாறு - பகை அட்டாய் - அழித்தாய் மாயமோ - இதென்ன மாயமோ மருட்கைத்தே - வியப்பு உடையதாய் உள்ளதே!
பொருளுரை: தேவர்கள் கூடி வணங்கி போற்றும் திருமாலே தங்களின் செம்மையான தாமரை மலர் இரண்டு அடிகளால் மூன்று உலகும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே. அப்படி நடந்த அடி பஞ்ச பாண்டவர்களுக்காக அஸ்தினாபுர சபைக்கு தூதாக நடந்து சென்ற அடிகளாம்.(நர)சிம்மமாய் வந்து பகை அழித்தாய். இதென்ன மாயமோ!! வியப்பு உடையதாய் உள்ளதே! தொடரும்..
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே; பதப்பொருள்: அறு பொருள்- தீர்ந்த பொருள். அறுதியிடப்பட்ட பொருள். ஐய்யமற்ற பொருள்.
ஐவகை சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருள் என்றும் கொள்ளலாமாம்.
இவனென்றே- இவன் என்றே
அமரர் கணந்- தேவர் கூட்டம்
தொழுது ஏத்த- வணங்கி புகழ்ந்து பாட/சொல்ல
உறுபசி- நிறைந்த பசி
ஒன்று இன்றியே- ஒன்று இல்லாமலேயே
உலகு அடைய- உலகம் முழுவதையும்
உண்டனையே- உண்டாயே
உண்டவாய்- (அப்படி) உண்ட வாய்
களவினான்- களவி(திருட்டி)னால்
உறிவெண்ணெ- உறியினில் உள்ள வெண்ணை(தனை)
உண்டவாய்- உண்ட வாய்!!!
வண் துழாய்- வண்மையான துளசி
மாலையாய் - மாலையை உடையவனே
மாயமோ - இதன்ன மாயமோ
மருட்கை த்தே - வியப்பு உடையதாயுள்ளதே!
பொருளுரை தீர்ந்த பொருள் இவன் என்றே தேவர் கூட்டம் வணங்கி புகழ
நிறைந்த பசி ஒன்று இல்லாமலேயே உலகம் முழுவதையும் உண்டாயே!! அப்படி உண்டவாய் களவினால் உறியினில் உள்ள வெண்ணைதனை உண்டவாய்!!!வண்மையான துளசி மாலையை அணிந்தவனே!! இதன்ன மாயமோ !! வியப்பு உடையதாயுள்ளதே!
தொடரும்..