Saturday, May 13, 2006

கண்ணாடியும் அரசனும்

யாவர்க்கும் ரஞ்சனை செய்து, யாவர்க்கும் அவ்வவராய்
பாவனையாய், தீது அகலக் பார்த்தலால் - மேவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி, ஏற்ற ரசத்தால்
சதிருறறால், ஆடி அரசாம்


கண்ணாடி:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து- அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கி
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் - யாருக்கும் அவரவர்களாகவே தெரிந்து
தீது அகலக் பார்த்தலால் - தீமை இல்லாது மங்கலப் பொருளாகப் பார்ப்பதால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி - தன்னை பார்க்கும் எதிர் நிற்பவரை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி
ஏற்ற ரசத்தால் சதிருறறால - தன் பின்னே ஏற்றப் பட்டிருக்கும் ரசத்தால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

அரசன்:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து - எல்லா மக்களுக்கு இன்பம் தந்து
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் - எவருக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து
தீது அகலக் பார்த்தலால் - தீமை அகற்றி நன்மை அளிக்க முற்படுதலால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி - தன்னை அணுகும் எதிரியை வென்று தன்னுள்ளாக்கி
ஏற்ற ரசத்தால் சதிருறறால் - மேல் கொண்ட நவரசப் பொருள்களால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

9 comments:

Anonymous said...

che.. onnume puriyalappa.. pulavare athan vilakam ennavo ?

Ram said...

ப்ரியா அவர்களே,
தங்கள் பதிப்புகளை படித்தேன். என்னை பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றன அவைகள். மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். என் வாழ்த்துகள்.

"கண்ணாடி"யை "கன்னாடி" என்று தவறுதலாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். திருத்திக் கொள்ளவும்... :)

தொடர்ந்து எழுதவும் :)

Jeevan said...

nalla udharanam. well writen:)

Maayaa said...

ram,
thanks for the correction.. i was wondering why this word kannadi looks so odd to me..hehe..
the internet at home is not working and so i cant correct it now (from outside)..
thanks again..

jeevan
yeh
km pularval has written well..

Maayaa said...

corrected now.. thanks

Ram said...

நன்று! :)

Maayaa said...

hey ram
thanks for the appreciation !! appave sollala..kannaadi correctionla marandhu poiyten

யாத்ரீகன் said...

ப்ரியா.. இந்த தளத்தை படித்து வருகிறேன், மறுமொழி இட சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.. அரசனையும் இன்னொரு பொருளையும் சாமர்த்தியமாக ஒப்பீடு செய்யும் இந்த இரண்டு பாடல்கள் அருமை.. எங்கிருந்து பிடித்தீர்கள் இதை..

இதென்ன தேர்தல் சிறப்பு பதிவா ;-)

Maayaa said...

sendhil
kaalamegappulavarin thani paadalgal nnu oru puththagam irukku..adhai romba naal vaanga aasai paatu vaangi padichen.. adhilerirundha naan pathu post panninen..avlothaan