Tuesday, November 13, 2007

Thiruppaavai (திருப்பாவை) -1

"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்."

பொருள்:
மார்கழி மாதமும் முழு நிலா நாளுமான இன்று நீராடக் கிளம்புவோமா நேரான இழை அணிகலனை அணிந்த பெண்களே!!  செல்வம் நிறைந்த ஆப்பாடியில் உள்ள இளம்பருவ பெண்களே !!  கூர்மையான வேல் கொண்ட ( போர் காலத்தில் பசுக்களை ஓட்டிச் செல்லாமலிருக்க)  தீங்கு நினைப்பவருக்கு கொடியவனுமான நந்தகோபனுடைய குமரன்,  ஆழ்ந்த அழகிய கண்களையுடைய யசோதையின் இளம் சிங்கம், மேகம் போல உடல், செம்மையான கண்கள், கதிரவன் போன்ற ஒளியையும் சந்திரனை போன்ற முகம் கொண்டவனான நாராயணன் நாம் விரும்பியதைக் கொடுப்பான்(பறை தருவான்). எனவே உலகோர் புகழ இந்நோன்பில் ஈடுபடுவோம்.

maargazhith thingaL madhi niRaindha nannaaLaal
neeraadap pOdhuveer pOdhuminO nErizhaiyeer
seer malgum aayppaadic celvac ciRumeergaaL
koorvER kodunthozhilan nandhagOpan kumaran
Eraarndha kaNNi yasOdhai iLaNYsingam
kaar mEnic cengaN kadhir madhiyam pOl mugaththaan
naaraayaNanE namakkE paRai tharuvaan
paarOr pugazhap padindhElOr embaavaay.

Word for Word meaning:

maargazhi - Tamil month, maargazhi (december-january)
thingaL  - month
madhi niRaindha - full moon
nal naaL - auspicious day
neeraada - to bathe
pOdhuveer - those of you who desire to go
pOdhumino - let us go
nEr izhaiyeer - you who are adorned with jewels
seer - wealth, glory
malgum - full of
aaypaadi - Brindavana
celva - prosperous
ciRumeergaaL - O young girls
koor vEl - sharp spear
kodun thozhilan - cruel deed (to those who harm Krishna)
nandagOpan - Nandagopala, Krishna's father and chief of the cowherds
kumaran - son
Eraarndha kaNNi - eyes full of beauty
yasOdhai - Yashoda, Krishna's mother
iLam singam - lion cub
kaar mEni - with a body that is dark
cen kaN - semmaiyanaa (beautiful) eyes
kadhir - sun
madhiyam - moon
pOl - like
mugaththaan - with a face
naaraayaNanE - Narayana himself, Narayana alone
namakkE - to us, indeed
paRai - blessings / arul / whatever we wish for
tharuvaan - will give
paarOr (so that) - the people of the world
pugazha - will celebrate
padindhu - follow, get involved (in our 'nOnbu' or vow)
El - accept (etruk kol) / do the
Or Empaavaay- aaraaindhu / penance of paavai nonbu

From:
http://www.ramanuja.org/sv/alvars/andal/tiruppavai/verse1.html
http://ushiveda.blogspot.com/2006/12/1-5.html
Maadhavi Pandal -1 
http://madhavipanthal.blogspot.com/2008/12/01.html

7 comments:

ச.சங்கர் said...
This comment has been removed by the author.
ச.சங்கர் said...
This comment has been removed by the author.
R. Prabhu said...

Hi Priya!!

Great minds think alike!!! Naanum Andal pathi oru post pottu irukaen. Neengalum post pottu irukeenga. what a coincidence. Good one!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ப்ரியா!

தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலமும் தந்தமை நன்று! பிற மாநிலத்தவரும் திவ்ய தேசங்களில் திருப்பாவை சொல்கிறார்கள்! அவர்களும் பயன் பெற வேண்டும்! ஒலிச் சுட்டியும் கொடுக்கலாமே!

என்ன ப்ரியா? திருப்பாவை கத்துக்க ஆசையா-ன்னு போன இடுகையில் கேட்டீங்க! சரி நானும் ஆசை ஆசையா ஓடியாந்தேன்! அப்படியே மளமள-ன்னு எழுதத் துவங்கிடுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாராயணனே நமக்கே பறை தருவான்//

நாராயணனே! = நமக்கே!
இந்த ஏகாரங்களைக் கவனியுங்கள்!

அவனே நேரிடையாகக் கொடுத்து விடுவான்! இடைப்பட்ட ஆரவாரங்கள் தேவையும் இல்லை!
அவன் யாருக்குப் பெரிதாகக் கொடுத்து விடப் போகிறான்? நமக்கே தான்! நமக்கே நமக்கு!!

அவனுக்கே நாம்!
நமக்கே அவன்!!
இந்த உறவு முறையை எடுத்த எடுப்பிலேயே, முதல் பாசுரத்திலேயே ஆண்டாள் காட்டிக் கொடுத்து விடுகிறாள்!

கண்ணன் கூட கீதையில் பலதையும் சொல்லிக் கடைசியில் தான் மாம் ஏகம் சரணம்-னு பேசுகிறான்! ஆனா தாயார் முதலிலேயே பலன் என்ன-ன்னு சொல்லி விடுகிறாள்!

அப்பா தேர்வில் தேறினாத் தான் பரிசு கொடுப்பாரு! தாயார் தேர்வு தொடங்கும் முன்னரே என்ன பரிசு என்பதையும் சொல்லி, அந்த உற்சாகத்திலேயே தேர்வை எழுத வைத்து விடுகிறாள்! :-)

Maayaa said...

ரவி சங்கர் அவர்களே!
உங்க ஆர்வம் எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சிய தருது தெரியுமா..எப்பயுமே யாராவது நம்ம கூட சேர்ந்து படிச்சா நல்லா இருக்கும்ன்னு நினப்பேன். ரொம்ப நன்றி.

இப்போ இந்த நட்சத்திர பதிவுகள் போடுவதால மற்றும் வேலை நிறையா இருப்பதால திருப்பாவையை அடுத்தா வாரத்திலே இருந்து இன்னும் படிக்கலாம்னு இருக்கேன். ஏமாற்றமா இருந்தா மன்னிக்கவும்.

cheena (சீனா) said...

இப்பாடலை சிறு வயதில் தெருக்களில் மார்கழி மாதப் பஜனைக் கூட்டத்தில் இனிய காலைப் பொழுதில் பாடியது இன்னும் மனதை விட்டு நீங்கா நினைவாக உள்ளது