Tuesday, February 21, 2006

காளமேகமாய் சிலேடை!!!

நண்பர்களே!!
வெகுநாட்களுக்குப் பிறகு இங்கு சந்திக்கிறோம்!! இன்னும் இத்தளத்திற்கு வந்து "எதாவது பதிவு உள்ளதா?" எனப் பார்க்கும் நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

ஆத்திசூடிக்குப் பிறகு மற்றொரு நல்ல இலக்கியத்தைப் பற்றியோ (அ) அதற்கு மொழிபெயர்ப்போ செய்ய வேண்டுமென்ற அவா ஒருபுறமிருக்க, ஆராய்ச்சி வேலை மற்றொரு புறம் இழுக்க நான் வேலைக்கு முக்கியத்துவம் த்நதேன்.எழுத வேண்டுமெனற ஆசையை (படிக்காமல்/உழைக்காமல் ) குட்டிப்ரியா தளத்தில் எழுதி தீர்த்துக் கொண்டேன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சென்ற வாரம், சில நூல்களைப் புரட்டிப் பார்த்தேன். ஆனால், சொந்தமாக மொழிபெயர்க்க நிறைய நேரமும், கடும்உழைப்பும், விடாமுயர்ச்சியும் தேவை என்று உணர்ந்தேன.அது இப்பொழுது முடியாது என்று வருந்திக் கொண்டிருக்க, வாசகர்களுக்கு "நாம் படித்த (அ) படிக்கின்ற சிலவற்றைச் சொல்லலாமே" எனறு தோன்றியது. அதன் விளைவே இந்த (ம) பின்வரும் பதிப்பு (கள்)!!

"கவிஞர்கள் எல்லோரும் மேதாவிகள்!! அவர் போல் (அ) இவர் போல் என்னால் எழுத முடியவில்லையே! முடியவும் முடியாது!!"
- என்னைப பொருத்த வரை இவை சரியான கருத்து - ஆனால் தவறான சிந்தனை!! ஏனெனில் கவிஞன் பிறப்பதில்லை - உருவாக்கப்படுகின்றான் ! காலமும், சூழ்நிலையும், சுற்றுப்புறமும் உதவ ஒரு சராசரி மனிதன் கவிஞனாகின்றான்! கவிஞர்களின் எழுத்துகளில் தனித்துவம் இருப்பதால் தான் ஒவ்வொருவரும் அவரவர் வழிநடையின் மூலம் சிறப்பு பெருகின்றனர். யாரும் மற்றொருவர் போல் எழுத முடியாது!! எழுதவும் தேவையில்லை!!!

கவிஞர் எனறதும் என் நினைவுக்கு வருபவர் பாரதியே !! அவர் பாடல்கள் உண்மையை கக்கும் ; எதார்த்தம் நேரே நெஞ்சில் வேலாய்ப் பாயும் (point blankaa) . அதைக் படித்து, சொல்ல முடியாத இன்பத்தில் பல நாட்கள் திளைத்துள்ளேன்!! அதனால் மற்ற கவிஞர்களின் எழுத்தை ரசிக்காமல் இல்லை..பாரதிதாசனின் பாட்ல்களில் அன்பும் பாசமும் தேனாய்ப்பாயும் விதமும் ஒர் தனி அழகே . மாணிக்கவாசகரின் பாடலோ மனத்தை உருக்கும் பக்தியைக் காட்டும் !!

இப்படி எனக்குப் பிடிதத நிறைய கவிஞர்களில் காளமேகப் புலவரும் ஒருவர். அவரைப் பற்றி நினைத்தாலே அவரின சிந்தனைச்சிறப்பே நினைவுக்கு வருகிறது. தமிழ்ப்புத்தகத்தில் எழாம்-எட்டாம் வ்குப்பில் படித்த "காக்கைக்கா காகூகை" என்ற பாடலினால் சொக்கி இழுக்கப்பட்டு, சுய சம்பாத்தியம் பெற்றதும் அவரின் தனிப்பாடல் நூலை வாங்கிப் படித்தேன். இன்றும் நாளையும் திரும்பப் படிக்கிறேன்.அவ்வளவு புத்துணர்ச்சி அவர் சிந்தனையில் - அவர் சொற்களில்!! . அவருடைய வரலாற்றை உங்களுக்குச் சொல்ல அள்வளாது ஆசை இருப்பினும், அவரின் கவிதைகளைப் பற்றிப் பேச, அதன் சுவையை உங்களுடன் பகிர எண்ணும் ஆசையே விஞ்சி இருக்கிறது!!
அடுத்து வரும் பதிவுகளில் அவருடைய கவிதைகளில் ஒரு வகையான சிலேடைக் கவிதைகளைகளையும் அதன் பொருளையும் பதிக்க எண்ணியுள்ளேன். உங்களின் ஆர்வத்தைத்/எண்ணத்தை தெரிவியுங்கள்!!பிடித்திருந்தால் மேலும் சிலவற்றைக் சொல்ல விரும்புவேன்.(தமிழில் பதிவு செய்வது மிகவும் பொறுமையைக் சோதிக்கின்றது. ஆனால் தமிழில் படித்தால்(/அதுவும் நம் பதிவை தமிழில் படிக்க விரும்புகிறார்கள் என்று அறிந்தால்) ஒரு தனி இன்பம் தான்.

சிலேடை : சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு (அ) மூன்று பொருளுடன் விளங்கும் கவிதை சிலேடை எனப்படும் !
காளமேகப்புலவரின் கவிதைகளில் சிலேடை எனக்கு மிகவும் பிடிதத ஒன்று. எனெனில், அது மிக எளிதாகவும் (எல்லொரும் புரிந்துகொள்ளலாம்), அவரின் சிந்தனைச் சிறப்பை விளக்கக் கூடியதாகவும் விளங்கும் (Man!! he has a great thinking capability and he could use it effectively in tamil words .I am so impressed and I respect his intellect..Hats off ).

அடுத்த பதிவில் தான் பாருங்களேன்!!!!

16 comments:

G.Ragavan said...

நல்ல தொடக்கம் பிரியா. காத்திருக்கிறோம். சிலேடை தொடரட்டும்.

Muthukumar Puranam said...

kavigyan pirakiran enpathe sari endru ninaikiren..BHarathiyarin pugzh 7 vayathil ottapidarathil iruntha v.vu.si (ethnai peruku gyabagam iruko intha manithari!) ku ettiyathu eppadi? appozhuthe Bharathi endra pattam petra aasu kavi. (aasu kavi na?).

Hamsa said...

priya,
I do believe that a poet is born,not made. If we can peruse the annals of acknowledged poets, we might find that they have been prodigies as a child. Bharatidasan shone like the moon "borrowing light from the sun", Bharathi.
sorry;but that was my opinion..
ammam,
neengal solvathu unmaiye.
mm endral 1000 patagatha? ezunthal avan perum kalameghame!!!
waiting to read...actually cant wait...

Priya said...

thankd ragavan!!

pb and hamsa,
i though abt it. Yeh , i agree that poets are born and there were child prodigies and they are kindaa exceptional and they are the real poets (even kalamegapulavar is like that)...

all i was talking were about the other poets who think and write say
kambar, ottakootar, valluvar and new poets evloving now who created/es kaviyam in their own style..

i should have definitely mentioned about prodigies before saying ' kavinyan uruvakkapadukiraan'

yeh, and my point there was we need not worry that we cant write like him or her as it is not neccesary to be like somebody!!

Hamsa said...

priya,
neenga enna solla varenga nu puriyala. Do u mean to say that Kambar/ottakuthar/Thiruvalluvar ellam naturala poets ellanu? I guess they are few of the most gifted poets..
definitely, namakkunu oru style vanthuduthuna atha pathi namma kavalaiye pada vendam...

jeeves said...

காத்திருக்கிறோம் பிரியா.. நானும் காளமேகப் புலவரின் பாடல்களைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.. இங்கு கிடைக்க வில்லை.
அன்புடன்
ஜீவா

ranjit kalidasan said...

பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
உன்மையிலே காளமேக புலவர் வித்தியாசமான கவிஞர். தமிழில் வார்ததைகளுக்கும், வாக்கியத்திற்கும் ஆராய்ச்சி செய்தது போல் இருக்கும் அவர் பாடல்கள். வாலிக்கு முன்பே உன்மையிலே 'டபுள் மீனிங்' பாடல்கள் எழுதியது அவர்தான். நையாண்டிக்கு இதை சொல்லவில்லை, உன்மையிலே வில்லங்கமான சிலேடைகளும் அவர் எழுதி உள்ளார். திருவாரூரில் எங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு புராதமான சிவன் கோவிலுக்கு விஜயம் செய்து ஒரு பாடல் இயற்றியுள்ளார், அது இன்னும் அந்த கோவிலின் கல்வெட்டில் உள்ளது. அவரை பற்றி நிறைய கதைகள் நானும் கேட்டிருக்கிறேன். என் மாமா காளமேக புலவர், இரட்டைப்புலவர்கள் இருவர் பற்றிய ஒரு சுவாரசிய கதை ஒன்று சொல்லுவார், 'பானமே மண் தின்ற பானமே' என்று முடியும் ஒரு பாடல் பற்றிய கதை அது. மேலும் அவருக்கு நாகையில் நடந்த ஒரு சம்பவமும் கேட்க மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

Priya said...

i am trying to publish since long long.. the eblogger webpage appears to have some problem..
it is not letting me people..

do u have any problem

Priya said...

okay..published...

yeh, ranjith, ava matteraa neriya double meaning soll irukkaar.. naanum padichiruken!!!


thanks jeeves and hamsa

Anonymous said...

priya,
kalamega pulavarudaya siledai enaku romba pidikum.. looking fwd to it. Could not comment on the latest verse. good work. appreciate.
-vv

Priya said...

vv,
thanks for the encouragement!!
could not commentnaa ennaa??

Anonymous said...

onnum illa.. nethiku veetlendhu comment panna try pannum bodhu error vandhute irundhadhu...

-vv

Priya said...

okay..
yeh, hamsa also mentioned it !!I got it!!

sampath said...

காளமேக புலவர் பாடல்கள்..
ஆஹா....உடனே எழுதுங்க தோழி..

sampath said...

காளமேக புலவர் பாடல்கள்..
ஆஹா....உடனே எழுதுங்க தோழி..

Boothalingan said...

அனைத்தும் அருமை. உண்மையில் இது அனைவரையும் கவரும்விதமாக எழுதப்பட்டுள்ளது.
நன்றி காளமேகபுலவருக்கு......

நட்புடன்,
பூதலிங்கம்.க
கன்னியாகுமரி.