அன்புடையீர்,
நம்மில் பலரும் "வடவரையை மத்தாக்கி.." எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள் பாடிக் கேட்டு அகம் மகிழ்ந்திருப்போம். இன்று வழக்கம் போல் நானும் அந்தப் பாடலைக் கேட்கையில் கவிதையின் அழகு இசையின் இனிமையையும் விஞ்சி நின்றது. பாடலில் பொருளை கவனிக்க, என்னையும் அறியாமல் அப்படி ஒரு ஈர்ப்பு என்னுள் வந்தது. அதன் காரணமாக ஒவ்வொரு பதத்தின் அழகையும் கவனிக்க விழைந்தேன்..ஆனால் ஆங்காங்கே சில இடங்களில் எனக்குப் பொருள் விளங்கவில்லை. இணையத்தளத்தில் பொருள் தேட விழைந்தேன். எத்தனையோ தளங்களில் பொருள் விளக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை படிக்க துவங்கையதில் துக்கம் என் தொண்டையை அடைத்தது. இவ்வளவு அழகான பாடலில் எனக்குத் தெரிந்த இடங்களிலேயே தவறான விளக்கங்கள். அந்தோ பரிதாபம்!! தெரியாதவற்றிற்கு பொருள் கொள்ள முடியாமல் தவித்தேன். பொருளுக்குத் தான் இந்த அவல நிலையென்றால் சொற்களே பல தளங்களில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில பாடகர்களும் சில இடங்களில் சொற்களை வதைக்கிறார்கள். பல இடங்களில் தேடிய பிறகு,Tamil Virtual University போன்ற இடங்களில் சரியான பொருள் கண்டேன்..இருப்பினும் எல்லா வரிகளையும், அனைவரும் பார்க்கும் வசதி (public access) இல்லை. மேலும், பதவுரை எங்கும் இல்லை. விளக்கம் அறியா பதங்களை குறித்துக் கொண்டு அகராதியில் பொருள் தேடி, அதனை நம்பகமான தளங்களில் உள்ள பொருளுரையுடன் ஒப்பிட்டு வைத்துள்ளேன். இங்கு நாளை முதல் பதிவு செய்ய உள்ளேன். அனைவரும் பதப்பொருள் அறிந்து இப்பாடலைக் கேட்டால், அதன் சுவையே தனி..எனக்கு இதைக் கேட்கும் போது அவ்வப்போது திருவாசகத்தின் "புற்றில் வாழ் அரவம்.." பாடல் நினைவுக்கு வருகிறது !! இன்று இங்கு பாடலைக் கேளுங்கள்.
Wednesday, July 01, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
"...சிலப்பதிகாரப் பாடலை எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள் பாடிக் கேட்டு அகம் மகிழ்ந்திருப்போம் "
"...கவிதையின் அழகு இசையின் இனிமையையும் விஞ்சி நின்றது"
"அந்தோ பரிதாபம்!!..."
இந்தநடை(style) மிக வழமையானது போலுள்ளது.
எமக்கென்னவோ இது உங்களியல்புபோலில்லை(heard your podcast).
நீங்கள் முயன்றால் புதுமையாகவும், இனிமையாகவும் அதேவேளை உங்களே உங்களின் தனித்துவமான நடையாகவும் அமையும் என்பதில் எமக்கையமில்லை.
எமக்காக வேண்டா, உங்களுக்காகவாவது முயன்றுதான் பாருங்களேன்.
தனித்துவம் தானே அழகு!, இனிமை!!, சிறப்பு!!!
* 'விடுதலை நாள்' வாழ்த்துகள் :-)
ஏனோ ஊடகம், மக்கள் என எல்லோரும் 'சுதந்திர தினம்' என்கின்றனர்.
தமிழ் தெரியவில்லையா; சொல்ல உள்ளமில்லையா அல்லது இது தமிழல்ல என்றே தெரியவில்லையா !
நீங்கள் ஆண்டுள்ள சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்:
அகராதி = அகரமுதலி, நிகண்டு
கவிதை = பாடல், செய்யுள், யாப்பு, பாட்டு, பண், பா
கி. ராசு,
நான் பதிவு செய்யும் போது "தனியாக எதுவும்" எழுதிப் பார்ப்பதில்லை. எனக்குத் தெரிந்த வரை இப்படித் தான் நான் எழுதுவதுண்டு. சொல்லப்போனால் சில சமயம் நான் பேசும் நடையை மக்களும் வேடிக்கை செய்வார்கள் :(
ஆனால், இதுவும் சொல்ல வேண்டும். நான் பேசும் விதமும் எழுத்தில் விதமும் மாறாக இருக்கக்கூடும். ஏனெனில், நானாக சிறு வயதில் எழுதியது/ படித்த்து - பேச்சுப்போட்டி / கட்டுரைப்போட்டி க்கானவை..மேலும் நான் படிக்கும் புத்தங்கங்கள்..அவற்றின் பாதிப்பு நான் எழுதும் கடித்ங்களிலேயே கூட காண்பதுண்டு.இங்கும் காணப்படலாம்.
தமிழ் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி!
மாற்று கருத்தையும் ஏற்று அதுகுறித்து சிந்திக்கும் 'உங்கள் உள்ளம் பாராட்டுக்குரியது'.
உங்களின் உயரத்திற்கு இதுவேச் சான்று.
{ இங்கு 'மரூஉ' வழக்கில் பேசலாம்(எழுதலாம்) என உள்ளேன். பிறமொழிச் சொற்களின் கலப்பில்லா பேசும் நம் எளிய மக்களின்(இவர் வேறுமொழியறிந்தாரில்லை ஆதலால் தமிழை சிதைத்தாரில்லை) மொழிதானே தமிழ்... }
மறுபடி பாடகர் பாலசுப்பிரமணியின் கருத்த சொல்ல ஆச:
' "பாடும் போது முதல்ல பாடனவரோட உணர்வ(feel) மட்டும் கொண்டுவரபாருங்க ஆனா அவர பாவனை(imitate) செய்யாதிங்க" அது தான் நா சொல்றது', எனச்சொல்வார்.
அவர் நடத்தும் 'அமாம்(Hamam) என்னோடு பாட்டுபாடுங்கள்' நிகழ்ச்சியில்(செயா தொ.கா. சனி இரவு 08:00 மற்றும் ஞாயிறு இரவு 11:00 IST) எல்லா பங்கேற்பாளருக்கும் வலியுருத்தி சொல்வார்.
உங்களாட்சியில் யான் கண்ட பிறமொழிச்சொற்கள்:
வார்த்தை=சொல்
வாக்கியம்=சொற்றொடர்
கடிதம்=மடல்
சொல்லப்போனால் யான் தமிழில் ஒன்றுமறிந்தானில்லை...
கடலோரமாய் சிப்பியைப் பொறுக்கும் ஒரு சிறான் கடலை பார்த்து வியப்பது போல் தான் என் நிலையும்.
ஆமாம் 'மரூஉ' வழக்கில் எழுதுவதாக அல்லவா சொன்னேன்... :-) ... இதுதான் நீவிர் சொன்ன 'பாதிப்பு' போலும் நண்பரே :-)
Post a Comment