சும்மா கதை கேளுங்க!
வாசகர்களே!! எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே குழந்தை. சின்ன வயசுல பாட்டி, தாத்தா, மாமா, சித்தி இவங்க எல்லோருடனும் வளர்ந்தேன். குடும்பத்துல எல்லாருமே 'தமிழ் பழமொழி, தமிழ் வார்த்தையை வச்சு விளையாடுதல்'ன்னு ரொம்ப கேலியும், கும்மாள்முமா இருப்பாங்க. புராண கால சம்பவங்கள சொல்லி 'இத யார் சொன்னது?', 'அது எப்படி நடந்தது?' ன்னு பேச்சு நடக்கும். எவ்வளவு கதை சொல்லியிருப்பாங்கன்னு கணக்கே கிடையாது. அதோட பழமொழி சொல்லி அவங்க நம்மள திட்டுவதும், நாங்க எதிர்த்து பேச புராண கதையை கிளர, அவங்க கோபப்பட, அங்க நம்மையும் அறியாம எவ்வளோ தமிழ் சரித்திரம் கத்துகிட்டு இருக்கோம்னு நினைச்சா அவ்ளோ பூரிப்பா இருக்கு. உதாரணத்துக்கு ஒரு கதை கேளுங்க!
அம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் குப்பையாய் கிடக்கும் அறையைப் பார்த்து "என்ன.. இப்படி எங்க பார்த்தாலும் புத்தகம், பேனா, பைன்னு இரைச்சு வச்சுருக்கியே...பக்கத்து வீட்டு உஷாவை பாரு. எவ்வளவு அழகா கலையாம மேஜயில வச்சுருக்கா" ன்னு திட்ட உடனுக்குடன் நான்/ எங்க வீட்டு குழந்தைங்க சொல்லும் பதில் " என் சாமான் எல்லாம் அதியமான் படைக்கலம்..அவளுது என்னவோ தொண்டைமான் படைக்கலம். உனக்கு நாங்க தொண்டைமானா இருந்தா போதுமா?!"- இந்த வரி சொல்லி கேட்டிருக்கீங்களா?? இதுக்கு பின்னாடி ஒரு குட்டி கதையே இருக்குங்க.
ஒரு முறை அதியமான் (ஒளவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன்) இன்னொரு மன்னன் தொண்டைமானுடன் போர் புரிய வேண்டிய நிலை வந்தது. அதியமான் பலசாலியானாலும் மற்ற உயிர் சேதத்தை எண்ணி தொண்டைமானோடு போர் புரிய விரும்பவில்லை. ஆனால் தொண்டைமான் என்னவோ போரை விரும்பினான். அதனால் அதியமான் ஒளவையாரை தூது போய் அவன் மனத்தை மாற்ற வேண்டினான். அதற்கிணங்கி ஒளவையாறும் தொண்டைமானைச் சந்தித்த போது அவனிடம் அவனை ஆயுதம் வைக்கும் இடத்திற்கு அழைத்து செல்லக் கேட்டார்.வாளும், கேடயங்களும் அதனிடங்களில் ஒரு தூசு படாமல் மின்னிக் கொண்டு இருந்ததைப் பார்த்து தந்திரமாக அவனிடம் " தொண்டைமானே, உன்னிடம் ஆயுதங்கள் மிக அழகாக, கூர்மையாக உள்ளது. ஆனால் அதியாமானோ அதை தினமும் எடுத்து பயிற்சி செய்வதால் மொக்கையக்கி அங்கும் இங்குமாய் போட்டிருக்கான்..பாவம்" என்று கூறினாள். அவள் பேச்சின் உள் அர்த்ததை, அதியமானின் பராகிரமத்தை அப்பொழுது தொண்டைமான் புரிந்து கொண்டு போர் எண்ணத்தை கைவிட்டதாக வரலாறு. இத நாங்க எப்படி உபயோகப்படுத்தினோம் பாருங்க!!
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 1
குறிப்பு: இலக்கணத்தில் ஆர்வம் வளர்க்க மற்றும் மக்கள் சிறிதேனும் இலக்கணத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையோடு மட்டுமே இப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. கேள்வி பதில் முறையில் அமையப்பட்டுள்ள இவற்றில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்/திருத்தவும். விரிவாகக் கற்க தமிழாசிரியர்களை அணுகவும்.
சரி, முடிஞ்சவரை ரம்பம் போடாம சொல்ல முயற்சி செய்யறேன்.
தமிழ் இலக்கணம்!! 1. முதல்ல, உங்களுக்கு தெரிந்த ரெண்டு தமிழ் இலக்கண புத்தகங்கள மற்றும் யார் எழுதினாங்கனு நினைவு கூர்ங்க பாப்போம்? State Board, Central Boardnnu சொல்லக்கூடாது ..ஹி..ஹீ
அ. தொல்காப்பியம் - தொல்காப்பியர் ஆ. நன்னூல் - பவணந்தி முனிவர் (மூணுசுழி "ண" தாங்க). இங்கே இன்னும் சில.
ஆமா...ம் 2. இலக்கணம் எத்தனை வகை, என்னென்ன தெரியுமா?
ஐந்து வகைங்க. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
அ. எழுத்து (Orthography-letters): இதுல பாருங்க..எழுத்து தெரியாம நீங்க இத படிக்கவே முடியாது. அதுனால இந்த பகுதில சிலவற்றை நம்ம கட
கடன்னு பார்ப்போம்.
ஆ.சொல் (Etymology- words): இதுவும் நமக்கு தெரியும்.. ஆனா, எதுக்கு பேறு என்னன்னுதாங்க தெரியாது. இத தெரிஞ்சுகிட்டாலே சராசரி தமிழ் இலக்கணம் தெரிஞ்சவராயிடலாம். இந்த 7 நாளுல இத நம்ம சுலபமா கத்துக முயற்சி செய்யலாம்.
இ.பொருள் (Syntax-Matter): (இது என்னனு எனக்கு ரொம்ப நாள் சந்தேகம்) இந்த பகுதியில, 'வரிகளில் உள்ள வார்த்தை பிரயோகம், வரிகளின் அமைப்பு, நடை, விதிமுறை, ஆராய்வு' என்பதைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்காங்க. இந்த பகுதி நிறைய மொழிகளுல கிடையாதாம். மேலும், இவ்விலக்கணப்பகுதி சித்தாந்தத்துடன் (Philosophy) பின்னிப்பிணைந்து இருக்காம் (Lazarus அவர்கள் சொல்லியிருக்கார்).
ஈ.யாப்பு (Prosody): இது செய்யுளின் உறுப்பு (parts) மற்றும் வகை (Category) பற்றி சொல்வது (Versification of prosody and categories of poetry). அதாவது, சொல்(Word), நடை(Style) மற்றும் பொருளழகிற்கு(Meaning) ஏற்ப, ஓசை நலத்தைக் கொண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இலக்கணம். இத தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்.
உ.அணி (Rhetoric): வரிகளின் நடையை அலங்கரிப்பதைப் பற்றி சொல்வது. இது பேச்சில இருந்தா நம்ம பேசுவத எல்லோரும் இன்பமா கேப்பாங்க. ஒரு அழ்கு இருக்கும். யாப்பு, அணியை சேர்த்து நம்ம கடைசி நாளில் பார்ப்போம்.
முதல்ல.. எழுத்து இலக்கணம் பார்ப்போமா! 3. எழுத்துல என்னென்ன எல்லாம் அடங்குதுங்க?
அ) வடிவம்: ஒலி வடிவம் - Oral form. வரி வடிவம் -Written form
ஆ) வகை: முதலெழுத்து, சார்பெழுத்து
அ. முதலெழுத்து - Primary Letters
நமக்குதான் தெரியுமே!! 'முதலெழுத்து'ன்னா உயிர் எழுத்து (Vowels) - 12 + மெய்யெழுத்து (Consonants) - 18 = 30 ன்னு. உயிரெழுத்துகள குறில் (அ, இ,உ,எ,ஒ) , நெடில் (ஆ,ஈ, ஊ,ஏ, ஓ) இணை எழுத்து (ஒள,ஐ) ன்னு ஓசைக்கு ஏற்றார் போல பிரிக்கலாம். மெய்யெழுத்துகள வல்லினம் (க்,ச்,ட்,த்,ப்,ர்), மெல்லினம் (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) மற்றும் இடையினம் (ய்,ற்,ல்,வ்,ழ,ள்) ன்னு ஓசையோட தன்மைக்கேற்ப பிரிக்கலாம்.
ஆ. சார்பெழுத்து - Secondary/Dependent Letters. இத அடுத்த வாரம் பார்க்கலாம்
4. அது சரி... இந்த குறுகிய ஓசை, நெடிய ஓசைன்னு எல்லாம் ஏன் பிரிக்கணும்?
எழுத்தோட நீளத்துக்கு எல்லாம் அளவுன்னு (measure/meter) ஒண்ணு உண்டு. அதுக்கு பேரு தாங்க " மாத்திரை" (மருந்து மாத்திரை இல்ல).
ஒரு மாத்திரை = கண் இமைக்கும் நேரம்/கை சொடுக்கும் நேரம்.
குறில் எல்லாம் 1 மாத்திரை. நெடில்/ இணை எல்லாம் 2 மாத்திரை. ஆய்தம், மெய் எழுத்துக்கள் எல்லாம் 1/2 மாத்திரை. இந்த மாத்திரை அளவு எதுக்குன்னா, கவிதை எழுதும் போது ஒரு ஒலி, சந்தம், நடை இதெல்லாம் பாட்டு முழுக்க ஒரே மாதிரி இருக்க வேண்டாமா..அத சரியா கட்டுக்கோப்பா வைக்கதானாம்.
தெரிந்தால் சொல்லுங்கள் - 1
மக்களே !! எனக்கு ஒரு சந்தேகம்..
"வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ" -இந்த வரிகள் ஒளவையாருடைது என நான் நினைத்திருந்தேன். ஒரு தோழி இதற்கு ஆதாரம் கேட்க, இன்று வரை கிடைக்கவில்லை. இது யாருடைய வரிகள்?
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
நன்றி அக்கா
அதியமான் கதை அருமை. இலக்கணத்தை கற்றுக்கொடுக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இலக்கணத்தை கண்டு பயந்தோடிய பலரில் நானும் ஒருவன். கல்விக்கு வயதேது, இப்போதாவது கற்க முயற்சிக்கிறேன்.
இலக்கணம் பத்தி சொல்லும் போது, அதற்கு ஆங்கில வார்த்தையையும் சொல்லியிருக்கீங்க. நம்மாளுங்களுக்கு அப்படி சொன்னால் தான் புரியுமின்னு நெனச்சா? அதுவும் நல்லா தான் இருக்குது. மேலும் சொல்லுங்க. கேட்போம்.
நட்ச்த்திர வாழ்த்துகள்.. உங்க போஸ்ட் தமிழ்மணத்துல வரலையே :(
இலக்கணத்தை ஞாபகப்படுத்தியதிற்கு நன்றி :)
அதியமான் தொண்டைமான் ..விளக்கம் நன்று..
நன்றி Baby Pavan !
Anon,
ரொம்ப நன்றி.. தினமும் வாங்க!!
காட்டாறு ,
ஓ..அதுதான் இதுவான்னு ஆங்கிலத்தை வச்சு தமிழ் கத்துகலாமேன்னு தான்!!
ஏசு,
வாங்க வாங்க..
போஸ்டா.. அத ஏன் கேக்கரீங்க..பழைய போஸ்ட் எல்லாம் தமிழ்மணத்துல வந்திருக்குங்க. புது போஸ்ட் லிங்க் தான் சரியா வர மாட்டேங்குது..
தமிழ்மணம் மக்கள் சரி செய்ய முயற்சி பண்ணிடு இருக்காங்களாம்.
ஒண்ணும் புரியல..மண்ட காயுது.சரி, என்னால முடிஞ்சத பண்ணி பாத்துட்டேன்..அவ்ளோதான்
பாச மலர் அவர்களே!
ரொம்ப நன்றி
நட்சத்திர வாழ்த்துக்கள் பிரியா ! 30 நாட்களில் இந்தி மாதிரி 7 நாட்களில் இலக்கணமா ?? கண்டிப்பா கத்துக்குறேன். :)
எதேச்சையாகத்தான் வந்தேன் இங்கு. உங்கள் தமிழ் இலக்கண ஆர்வம் வியப்பாக இருக்கிறது. இலக்கணம் என்பது ஒரு மொழியின் உயிர்நாடி என்பதைவிட.. இலக்கணம்தான் மொழியன் பொருள்கொள்ளும் முறையைத் தீர்மாணிக்கிறது. அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கிறீர்கள். முயற்சிக்கு பாராட்டுக்கள். நட்சத்திர வாழ்த்துக்கள்.
-அன்புடன்
ஜமாலன்.
நல்லா கதை சொல்றிங்க........கதையும் அருமை.....தமிழ் இலக்கணத்தை நட்சத்திர வாரத்தின் முக்கிய பொருளாக எடுத்துக்கொண்ட உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்..........
இப்பாடல் பழம் பாடல் - அவ்வைக்கும் முந்தைய காலம். இலக்கணம் கற்றுக் கொடுக்க எடுத்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
பொன்வண்டு,
ஹீ ஹீ.. நானும் அதத்தான் நினைச்சேன்.
ஜமாலன் அவர்களே,
மிக்க நன்றி. இலக்கணத்தின் முக்கியத்துவத்த சொல்றீங்களே..ரொம்ப சந்தோஷம்
நன்றி அருள்!!
நன்றி சீனா!! யார் பாட்டுன்னு தெரிஞ்சா சொல்லுங்களேண்!!
Hello Priya,
Accept my congratulations first for your initiative to teach elementary Tamil grammar. After a long time, it is like a refresher course for me. :-)
Your style of narration is just excellent.
Keep up your good work.
- Ramya.
Ramya,
Thank you so much!!
I am glad that your are enjoying it!!
Great priya,
Congratulations.
You have taken me my childhood days thru this Adhiyaman / thodaiman story.
Keep it up
All the best
நன்றி கேசு அவர்களே!!
Thanks Priya,
My dad Kesu explained me about this Adhiyaman / Thondaiman story
Keep telling us more such stories thru this
வாசகர்களேன்னு விளிப்பதைப் பார்த்தால் நீங்கள் எழுத்தாளர்ன்னு சொல்லாம சொல்றீங்களா? :-)
உங்க வீட்டுக் குழந்தைங்க ரொம்ப அறிவாளிங்க தான். உங்களையும் சேத்துத் தான் சொல்றேன். அதியமான் படைக்கலம் தொண்டைமான் படைக்கலம்ன்னு துவைச்சு எடுத்திருக்கீங்களே? சூப்பர். :-)
அதியமான், ஒளவையார் கதையை நான் இன்னும் கொஞ்சம் வேற மாதிரி கேள்விபட்டேன். பயிற்சி செஞ்சு பழசாகலை; நிறைய போர் செஞ்சு எல்லா படைக்கலங்களும் பழசாயிருச்சு. உங்க வீட்டுக் குழந்தைகளும் நிறைய போர் செய்வீங்களோ? :-)
ஹிஹி நல்ல வேளை முதல் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க. எனக்குத் தொல்காப்பியம் மட்டும் தான் உடனே நினைவுக்கு வந்தது. நன்னூல் உங்க பதிலைப் படிச்ச பின்னாடி தான் நினைவுக்கு வந்தது. :-)
பொருள் இலக்கணம்ன்னா எப்படி எப்படி வாக்கியங்களை அமைக்கிறது அவற்றை எப்படி புரிஞ்சிக்கிறதுன்னு சொல்லிக்கிட்டு வர்ற இலக்கணமா?
நல்ல வேளை தெளிவா உயிர் எழுத்துகள் 12ன்னு சொன்னீங்க. எனக்குச் சொல்லித் தந்தவங்க சார்பெழுத்தான ஆய்தத்தையும் உயிர் எழுத்துகளோடவே சொல்லிக் கொடுத்து நான் ரொம்ப நாளா ஆய்தமும் உயிரெழுத்துன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
ஐயும் ஒளவும் நெடில் தானே. அப்படித் தான் இது நாள் வரைக்கும் நினைச்சுக்கிட்டு இருக்கேன். தொல்காப்பியமும் அப்படித் தான் சொல்றதா நினைவு. நீங்க சொல்ற இணையெழுத்துகள்ங்கற வகை புதுசா இருக்கே?
நீங்க சொன்ன பாட்டைப் படிச்சிருக்கேன். ஆனா யாரு எழுதுனதுன்னு நினைவில்லையே.
Vazhi! Shenbaga Laxmi,
Come to know you (tamilkkalvi.blogspot.com) through Dinamani Kadir couple of months back.
Thought you may be a Tamil student (graduate). Your job is simply great.
The way you address (makkale ena vilithal) and your style of writing (thamizhai polavae ungal mozhi nadayum iyalbaga/azhaga ulladu) are so impressive
Could see/read your garvam(azhagana) in the caption (idarku tamil sol enna?)
In Ilakkanam Oru Kanottam-I nil Mudal Ezhuthu pirivil vallina ragaramum idaiyina ragaramum idammari ullana
Till date thought that ai and ow are nedil but you said they are inai ezhuthukal (there also comment regarding this but could not see your reply there)
Natcahthira vaarathai kolu vudan opittu atharku thaangal aayatham avathum appadiyae vasagarai aayatha paduthuvathum miga iyalbaga seiduirunthirgal
As you are only child your blog (valai poo) also unique
Was studied in English medium but not good at either of the language so please bear
If time permits, please visit http://pradje.hi5.com
Expect/Respect your comments, whatever it may be, so please send at your earliest possible
Add at Skype or yahoo messenger by kirouchenaradje@yahoo.com
Would be online most of the time
Anbudan,
Krishna Raj, P.
Pondicherry
Vazhi ! Shenbaga Laxmi,
To know the author you could better ask Dr. Nannan who answers peoples’ queries regarding Tamil grammar and literature, every Sunday 7 a.m. IST in Makkal Tholai katchi.
Anbudan,
Krishna Raj, P.
Pondicherry
http://pradje.hi5.com
kirouchenaradje@yahoo.com
மிக அழகாக கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்ததினால் பெற்ற அறிவை கூறியுள்ளீர்கள்.
எனக்கு என் தாய் தந்தை கூறிய நிறைய கதைகளும், பழமொழிகளும் நிநைவிற்கு வருகிறது.
மிக அழகாக கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்ததினால் பெற்ற அறிவை கூறியுள்ளீர்கள்.
எனக்கு என் தாய் தந்தை கூறிய நிறைய கதைகளும், பழமொழிகளும் நிநைவிற்கு வருகிறது.
Post a Comment