Saturday, January 12, 2008

நன்றி! மீண்டும் வருக!!

என் இனிய தமிழ் மக்களே!!

இந்த வலைத்தளப் பதிவுகளை தினம் வந்து படித்து என்னை ஊக்குவித்ததற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல அனுபவம். மனதில் இருந்த சில கதைகள சந்தோஷமாகச் சொன்னேன். இலக்கணத்தை, ஒரு பெரிய தமிழ் கூட்டத்தில் பேசணும்ன்னு எனக்குள்ள இருந்த தவிப்பு ஒரளவுக்குத் தணிந்தது. மேலும் எனக்குள்ளிருந்த கேள்விகளையும் கேட்டாச்சு. பதில எப்பொழுது தெரிந்தாலும் சொல்ல வேண்டுகிறேன். எல்லாவற்றுக்கும் மேல, இங்க பல நண்பர்கள் கிடைத்துள்ளனர். நிச்சயம் உங்கள் வலைத்தளங்களுக்கு வந்து நல்லவற்றைக் கற்று, நம் நட்பை வளர்க்க முயல்வேன். இன்னும் நம்ம நிறைய பேசுவோம்..

மேலும், இங்கு திருப்பாவையைத் தொடர உள்ளேன். அதன் பிறகு, தினம் ஒரு பதிவு இடாவிட்டாலும், அப்பபோ பதிவு செய்யறேன்...வாங்க!! திருப்பாவை வேண்டாமா!! குட்டிப்பிரியா வுக்கு வாங்க..வெட்டிக் கதை பேசலாம். அதுவும் வேண்டாமா. ஆன்மீகப் பகுதிக்கு வாங்க!! அங்க பார்க்கலாம்.

வரப்போகும் 'தை' மாதம் உங்களுக்கு எல்லா நன்மையையும் தரட்டும்!!
வாய்ப்பளித்தமைக்கு நன்றி!!

நன்றி! மீண்டும் வருக!!

அன்புடன்,
ப்ரியா (எ) செண்பக லட்சுமி

4 comments:

வடுவூர் குமார் said...

உங்கள் பக்கம் திறக்கும் போது ஏதோ சர்டிபிகேட் கேட்கிறதே?!- பயர்பாக்ஸில்.

Unknown said...

வாழ்த்துக்கள்

ப்ரியா (எ) செண்பக லட்சுமி

R. Prabhu said...

Ellarum Bharathiraja style-la start pannuvaanga, ana, neenga avaru style-la 1-week of post-sa mudichuteenga. Congratulations!!!!

Thiruppullani Raguveeradayal said...

"தினமணி கதிர்” இதழுக்கு முதலில் நன்றி. இன்று அதில் தங்களது வலை பற்றிய குறிப்பு இருந்தது. பெயருக்கு ஏற்றாற்போலவே வலையும் பொருள் (திரு -லக்ஷ்மி) நிறைந்து செண்பகமாய் மணக்கின்றது. தவறாமல் வலையில் நுழைவேன். இக்காலப் பள்ளிகளிலும் இப்படி இலக்கணம் சொன்னால் பலரும் மரபுக் கவிதைக்கு மாறிவிடுவார்கள். திருவரங்கத்தந்தாதி, சடகோபரந்தாதி போன்ற பழைய நூல்களுக்கு எழுதிய உரைகள் போல் சுவையாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
http://thiruppul.blogspot.com
http://thiruthiru.wordpress.com