மக்களே!!
வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். படிப்பின் 'பளு'வால் அடிக்கடி எழுத முடியவில்லை. எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றமளித்ததற்கு மன்னிக்கவும் !!
திருப்பாவை - ஆண்டாள் மார்கழி மாதத்தில், பெருமாளை நோக்கிப் பாடிய பாசுரங்களின் தொகுப்பு என்று அனைவரும் அறிவோம். இதை ஒரு தெய்வீக படைப்பாகக் கருதி இன்றும் 'திருப்பதி'யில் உள்ள தமிழ் பேசாத மக்களும் சொல்கின்றனர். எப்பொழுதும் பெருமாளின் மார்பில் அணிந்திருக்கும் இலக்ஷ்மியை ஸ்நான சமயத்தில் எடுக்கும் சமயத்தில் திருப்பாவையே சொல்லப்படுகிறதாம். அதாவது பெருமாள் மிகவும் லகித்துக் கேட்பது திருப்பாவை. ஆகவே திருப்பாவை சொல்லும் சமயத்தில் தான் இலஷ்மியை எடுக்கப் படுகிறதாம். அந்த அளவிற்கு நமது தமிழ்ப் பாசுரம் திருப்பாவை பெருமை கொண்டது.
திருப்பாவையை ஒரு தெய்வீக பாசுரமாகப் பார்க்காமல் இலக்கியமாகப் பார்த்தாலும் அவ்வளவு அழகு என்று தொலைக்காட்சியில் ஆன்றோர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். ஒவ்வொரு மார்கழியிலும் அதனை ஒவ்வொரு நாளாகக் கற்றுக் கொள்வேன் என்று எண்ணி விழைந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு நாளில் ஓரு பாசுரம் கற்றுக் கொள்வது இயலாமல் போய் விடுகின்றது.
அதனால் இம்முறை 11/2 மாதத்திற்கு முன்னே தொடங்க எண்ணியுள்ளேன்.
என்னைப் போல் உள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தெரிய வந்தால் படிப்பதற்கு உற்சாகமாக இருக்கும் என எண்ணி இப்பதிவைத் தொடங்குகிறேன். வாரத்தில் 3-4 காவது கற்றுக் கொண்டால் + வாரக்கடைசியில் மனப்பாடமாய் ஒப்பித்துப் பழகினால் கற்றுக் கொண்டு விடலாம் என நம்புகிறேன்.
பதவுரை தெளிவுரை internetடில் இருந்து எடுத்து இங்கு பதிவு செய்யப் எண்ணியுள்ளேன். மற்றபடி இதில் என் பங்கு எதுவும் இல்லை.
உங்கள் ஆர்வத்தை எனக்குத் தெரியப்படுத்தவும்..நன்றி
Sunday, November 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ennavo kaapi kudikka koopidra mathiri'la koopidreenga!! start pannunga..
thodangitaa pochu!!
நல்ல முயற்சி...சீக்கிரமே அனைத்து பாசுரங்களையும் கத்துக்குங்க...அனைவருக்கும் கத்துக்குடுங்க :)
"பதவுரை தெளிவுரை internetடில் இருந்து எடுத்து இங்கு பதிவு செய்யப் எண்ணியுள்ளேன். மற்றபடி இதில் என் பங்கு எதுவும் இல்லை."
இப்படியெல்லாம் வெள்ளாந்தியா எழுதக்கூடாது :)
hahaa haa..thank you
நல்லதொரு முயற்சி - நல் வாழ்த்துகள் - தொடர்க
Post a Comment