"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்."
பொருள்: இந்த வையத்தில்(உலகத்தில்) வாழ்பவர்களே, நாம் பாவை நோன்புக்கு செய்யும் கர்மங்களைக் கேளுங்கள். பாற்கடலில் மெல்ல துயில் கொண்டுள்ள பரமனின் திருவடிகளை பாடுவோம். விடியற்காலை(நாட்காலே) நீராடுவோம். நெய்,பால் போன்றவற்றை உண்ணாமல் இருப்போம். கண்களுக்கு மையிடாமல், மலர்கள் சூடாமல் இருப்போம். செய்யக்கூடாதவற்றை செய்யாமல் இருப்போம். பிறரை கோள்(தீக்குறள்) சொல்லித் திரியாமல் இருப்போம். தகுதியுள்ளவர்களுக்கு பொருளும், பிச்சையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு(ஆந்தனையும்) கொடுத்து உய்வதற்காக நோன்பு நோற்போம் .
vaiyaththu vaazhveergaaL! naamum nampaavaikkuc *
ceyyum kirisaigaL kELeerO * paaRkadaluL
paiyath thuyinRa paraman adi paadi *
neyyuNNOm paaluNNOm naatkaalE neeraadi *
maiyittezhudhOm malarittu naam mudiyOm *
ceyyaadhana ceyyOm theekkuRaLai cenROdhOm *
aiyamum piccaiyum aandhanaiyum kai kaatti *
uyyumaaReNNi ugandhElOr embaavaay.
Word for Word meaning
vaiyaththu - of the world
vaazhveergaaL - O people
naamum - we
nam paavaikku - for our vow, our rite
ceyyum - will do
kirisaigaL - deeds (austerities) (Kriyaigal)
kELeer- O listen
paal kadaluL - on the milk ocean
paiya - gently
thuyinRa - sleeps
paraman - supreme person
adi - feet
paadi - will sing
ney - clarified butter (ghee)
uNNOm - we will not eat
paal - milk
uNNOm - we will not eat
naatkaalE - in the early hours of every morning
neeraadi - we will (wake up and) take our baths
mai - collyrium (black eye makeup)
ittu ezhudhOm - we will not adorn (our eyes) with
malar - flowers
ittu naam mudiyOm - we will not wear in our hair
ceyyaadhana - what one shouldn't do
ceyyOm - we will not do
thee kuRaLai(yai) - bad untruths, gossip
cenRu OdhOm - we will not go around spreading
aiyamum - alms to those who don't ask (but need or deserve)
piccaiyum - and alms (bhiksha) to those who ask
aandhanaiyum - liberally(alavu ilaamal)
kai kaatti - we will give
uyyum - of sustaining ourselves
aaRu - way
eNNi - contemplating
ugandhu - happily
El - do
Or Empaavaai - the penance of paavai nonbu
From:
http://www.ramanuja.org/sv/alvars/andal/tiruppavai/verse1.html
http://ushiveda.blogspot.com/2006/12/1-5.html
Wednesday, November 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மார்கழை மாதப் பனிக் காலக் காலையில் திருவெம்பாவாய் படிப்பதும் கேட்பதும் சாலச் சிறந்த செயல்களில் ஒன்று
Post a Comment