Sunday, December 16, 2007

திருப்பாவை (Thiruppaavai) - 4

ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பொருள்:
மழைக்கு அதிபதியான வருணனே (கண்ணனே) , நீ சிறிதும் ஒளிக்காமல்(கைகரவேல்) நடுக்கடலில்(ஆழியுள்)புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு(முகந்து) ,மேலே ஆகாயத்தில்  மேல் ஏற்றி,  எல்லாவற்றிற்கும் ஆதி மூலமான இறைவனின் உருவம் போல் கறுத்து, வலிமையான அழகிய தோள்களையுடைய பத்மநாபன் கையில் மின்னும் சக்கரம்(ஆழி) போல் மின்னி , சங்கு(வலம்புரி) போல் ஒலித்து, சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல் சரமாக மழையாய்,  உலகினர் மகிழ நாங்களும் மார்கழி நீராடி மகிழ பொழிவாயாக !!

aazhi mazhaik kaNNaa! onRu nee kai karavEl *
aazhiyuL pukku mugandhu kodu aarththERi *
oozhi mudhalvan uruvam pOl mey kaRuththup *
paazhiyan^ thOLudaip paRpanaaban kaiyil *
aazhi pOl minni valamburi pOl ninRadhirndhu *
thaazhaadhE saarngam udhaiththa saramazhai pOl *
vaazha ulaginil peydhidaay * naangaLum
maargazhi neeraada magizhndhElOr embaavaay.


Word for Word meaning
aazhi -circular; ocean-like in expansiveness
mazhai -rain
kaNNaa -O dear god! (Andal addresses the presiding deity of rain here)
onRu(m) -even a little bit
nee -you
kai karavEl -don't withhold
aazhiyuL -into the deep oceans
pukku -entering
mugandhu kodu- fetch
aarththu -thunder sound -adhirndhu or anithu
ERi -climb
oozhi -primordial
mudhalvan -First One
uruvam pOl -like the form
mEy -body
kaRuththu -become black
paazhi -great/valimai
am - beautiful
thOL -shoulders
udai -with these
paRpanaaban -the One who has a lotus navel, Lord Vishnu
(Sanskrit: padmanAbha)
kaiyil -in that person's hand
aazhi pOl -like the discus
minni -shine
valamburi pOl -like the conch
ninRu -residing
adhirndhu -resound (the sound of blowing a conch)
thaazhaadhE -without tarrying, instantly
saarngam -Lord Vishnu's bow
udhaiththa -shoot forth (lit. kicked)
saramazhai pOl -like the shower of arrows
vaazha -flourish, prosper
ulaginil -in this world
pEydhidaay - rain!
naangaLum -we too
maargazhi neeraada-bathing during margazhi
magizhndhu -will be happy, exult
el - do
or empaavaay - the  penance of paavai nonbu

Modified slightly from
http://www.ramanuja.org/sv/alvars/andal/tiruppavai/verse3.ஹ்த்ம்ல்
http://ushiveda.blogspot.com/2006/12/1-5.html
தொடரும் 

1 comment:

cheena (சீனா) said...

மார்கழி நீராடி மகிழ மழை பொழிவாயாக !!

நன்று நன்று