Thursday, February 08, 2007

காளமேகமாய் சிலேடை- பூசணிக்காயும் பரமசிவனும்

காளமேகப் புலவரைப் பற்றி ப்ரபுவின் அருமையான பதிவைப் பாருங்கள்!!

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!!

பூசணிக்காயானது :

அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!

சிவபெருமான் :

அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.

தொடரும்..

14 comments:

Badhri said...

Ah! Cool!
I thought he didn't write any poem other than the famous idaicchi-and-more poem!

:)

Maayaa said...

hey,
avar neraiya type of songs paadirukar- siledai, vittaracheyul,kurippukku paadi seiyyul pola pala types...

R. Prabhu said...

Nice post! I was really admired by his poetic intellect and this time posted an article in my blog. Please take a look :)

Maayaa said...

yeh.. seriously!!

நாகை சிவா said...

காளமேகப் புலவர் நாகையில் வாயை குடுத்து புண்ணாக்கி கொண்ட கதை தெரியுமா உங்களூக்கு?

Maayaa said...

theriyaadhe??? enna adhu??

நாகை சிவா said...

சிலேடையில் ராஜாவான அவருக்கே சிலேடையில் அல்வா கொடுத்த ஆட்கள் நம்ம ஊர் பயல்கள். இதைக் குறித்து ஒரு பதிவு விரைவில் என் பதிவில் இடுகின்றேன்.

R. Prabhu said...

Thanks for linking my blog to your post!!!

விஜயன் said...

பிரியா பதிவுகளில் இருந்து இவ்வளவு நாள் ஏன் பிரிவு ?

அற்புதம்.தொடரட்டும் உங்கள்
முத்திரைப் பதிப்பு.

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்துகள் பிரியா.

குறைந்த பட்சம் இந்த வாரமாவது இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிட்டால் நல்லது.

பின்னூட்டம் இடுவோருக்கு சலிப்பிருக்காது.

அதான் மாடரேஷன் இருக்கே ப்ரியா.

Maayaa said...

ரொம்ப நன்றி துளசி அவர்களே!!
அத எடுத்துட்டேன்!!

Unknown said...

காளமேகப் புலவருக்கு நானும் ரசிகன். சிறப்பான பதிவு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இலக்கியப் பாடல்களில் காளமேகப் புலவரின் திறன் போற்றத் தக்கது. சிலேடை தமிழுக்கே உரிய சிறப்பு
அதை வெகுவாகக் கையாண்டு வெற்றிகண்டவர் இவர்.
தங்கள் தளத்தில் தொகுத்துள்ள பாடல்கள் சிறப்பானவை.
முழுத் தொகுப்பும் உரையுடன் இணையத்தில் கிடைக்குமா??

- இரவீ - said...

நல்ல பதிவு ... தொடருங்கள்.