Wednesday, January 25, 2006

ஆத்திசூடி - 17

101. வித்தை விரும்பு
கற்பதிலே ஆர்வம் கொள்வாயாக

102. வீடு பெற நில்
நற்கதி அடையும் காரியங்களைச் செய்வாயாக

103. உத்தமனாய் இரு
உலகத்தவருடன் நல்லவனாக நடந்து கொள்

104. ஊருடன் கூடி வாழ்
ஊர்மக்களுடன் ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவாயாக

105. வெட்டெனப் பேசேல்
வருத்தம் உண்டாகுமாறு கத்தி வெட்டைப் போல பேசாதே

106. வேண்டி வினை செயேல்
உன் நன்மைக்காக வேண்டுமென்றே தீய காரியங்களைச் செய்யாதே

107. வைகறைத் துயில் எழு
அதிகாலையில் எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே

109. ஓரம் சொல்லேல்
நேர்மை தவறி ஒரு பக்கம் பேசாதே!!
முற்றும்

8 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

மிக நல்ல முயற்சி. நல்ல பதிவுகள். நன்றி.

Maayaa said...

மிக்க நன்றி சிவகுமார் அவர்களே!!

Pavals said...

//வித்தை விரும்பு//

நல்ல விஷயம் செய்யரீங்க, வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி said...

ரொம்ப நல்லா இருக்குது, குழந்தைகளுக்கு எளிமையாக சொல்லிக் கொடுக்க முடியும்.

ஆத்திச்சூடி, திருக்குறள் போன்ற நன்னெறி நூல்களின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சிறுவர் கதை தயாரிக்க இருக்கிறேன்.

கொஞ்சம் காலம் ஆகும் என்று நினைக்கிறேன். அப்போ நீங்க கொடுத்த விளக்கத்தை உபயோகிக்கிறேன். நன்றி.

பரஞ்சோதி

Sivakumar said...

Thanks a lot priya.. I was searching for the rather meaning of the words of Athichudi and other other tamil literature.. rather than intrepretations..
Thanks

Sivakumar said...

Ms Priya,

I appreciate your work.
I have a small request, though its a big concern for me..
Aththichudi are made of two words. In your blog you have split the words, some has 3 or 4 words.
Please avoid it... pls dont simplify tamil to make it easy for people to understand... our learned friends can very well understand even if you dont split the words...lets take people in a healthy direction.
you can please refer to my blog for the as written form of athichudi.

Anonymous said...

i appreciate u r effort.i wanted to teach my son with meanings.keep up the good work

Anonymous said...

நல்ல முயற்சி. பாராட்டுகள். இணைய வலையில் ஆத்திசூடியின் பொருள் தேடி தேடி முடிவில் உங்கள் தளத்தில் கண்டேன்.
- யஷ்வந்த்