61. தெய்வம் இகழேல்
தெய்வத்தை இழிவாகப் பேசுதல் கூடாது
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
உன்னுடைய நாட்டு மக்களோடு ஒற்றூமையாக வாழ்வாயாக !
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
உன்னுடைய நாட்டு மக்களோடு ஒற்றூமையாக வாழ்வாயாக !
63. தையல் சொல் கேளேல்.
பெண்களின் தீய சொற்களைக் கேட்டு நடக்காதே !
64. தொன்மை மறவேல்.
பழமையான ந்ட்பு, உறவு முதலியவைக்ளை மறந்து விடாதே
பெண்களின் தீய சொற்களைக் கேட்டு நடக்காதே !
64. தொன்மை மறவேல்.
பழமையான ந்ட்பு, உறவு முதலியவைக்ளை மறந்து விடாதே
65. தோற்பன தொடரேல்.
முடிக்கமுடியாத காரியங்களைத் தொடங்காதே
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வாயாக
நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வாயாக
67. நாடு ஒப்பன செய்
உன்னுடைய நாட்டிலுள்ளோர் ஒத்துக்கொள்ளக் கூடிய காரியங்களையே செய்.
68. நிலையில் பிரியேல்.
உன்னுடைய கொள்கைகளில் இருந்து பின்வாங்காதே
69. நீர் விளையாடேல்.
தண்ணீரிலே விளையாதே
தண்ணீரிலே விளையாதே
70. நுண்மை நுகரேல்
(நோய் உண்டாக்கத்தக்க) இழிவு பொருளை உண்ணாதே!
தொடரும்..
1 comment:
//தையல் சொல் கேளேல் - பெண்களின் தீய சொற்களைக் கேட்டு நடக்காதே !//
தையல் - பெண்
கேளேல் - கேட்காதே
'தீய' என்ற வார்த்தை எப்படி வந்தது. அப்படியே இருந்தாலும், ஆணின் தீய சொற்களைக் கேட்டு நடக்கலாமா?
தையல் சொல் கேளேல் - பெண்ணின் சொல்லைக் கேட்காதே.
இதைச் சொன்னதும் ஒரு பெண்தான். அவ்வையார். கேட்கலாமா? வேண்டாமா?
-ஞானசேகர்
Post a Comment